அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Tuesday, March 24, 2009

பன்றி இறைச்சியை இஸ்லாம் தடை செய்திருப்பது ஏன்?

(தற்போது சில கிறிஸ்தவ தளங்களில் பைபிளில் தடைசெய்யப்பட்ட இயேசுவால் தடுக்கப்பட்ட - அதே சமயம் பவுலால் அனுமதிக்கப்பட்ட பண்றியின் மாமிசத்தை (PORK) உண்ணலாம் என்று போலி உமரால் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கட்டுரைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியிலேயே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதுடன், அந்த கட்டுரையில் உள்ள மடத்தனமான - முட்டாள்தனமான வாதங்களுக்கும் பதிலாக அவர்களாலேயே எதிர் கேள்விகள் எழுப்பப்பட்டு பதிவுகள் இடப்பட்டுள்ளது. (புகழனைத்தும் இறைவனுக்கே)

பண்றியின் மாமிசத்தை உண்ணுவது என்பது இயேசுவின் கொள்கைக்கும் பழைய ஏற்பாட்டுக் கொள்கைக்கும் எதிரான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. (பார்க்க லேவியராகமம் 11:7- 8, மத்தேயு - 5:17-19) இவற்றுக்கொல்லாம் மாற்றமாக இன்றைய கிறிஸ்தவத்தின் நிறுவனரான பவுலால் அனுமதிக்கப்பட்ட இந்த பண்றியின் மாமிசத்தை உண்பது கூடும் என்று நியாயப்படுத்தும் உமரின் கட்டுரைக்கு கிறிஸ்தவர்களாலேயே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு - எதிர் கேள்விகளும் எழுப்பப்படுகின்றது என்பதைப் பார்க்கும் போது போலி உமரின் போலித்தனங்களை முஸ்லீம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் உணரத் தொடங்கி விட்டனர் என்பது புலனாகின்றது.

எது எப்படி இருந்தாலும், இந்த பண்றியின் மாமிசத்தை இஸ்லாம் தடை செய்தது ஏன்? என்பது குறித்து சகோதரர் ஜாகிர் நாயக் கொடுத்த விளக்கத்தை இங்கே தருகின்றோம் -ஏகத்துவம்)


இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
பதில்: இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்? என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173)

மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு - 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.

கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைபிளின் அத்தியாயம் 11 - லேவியராகமம் வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 - உபாகமம் வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.

மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - ஏசாயா 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (PinWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,றைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் ,து போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி

பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.

பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.

ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் 'ஐலேண்ட்' என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Monday, March 16, 2009

புனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு (பாகம் - 2)

வெட்ட வெளிச்சமாகும் போலி உமரின் போலித்தனங்கள்!


இஸ்லாமிய அறிஞர் சகோதரர். அஹமத் தீதாத் அவர்கள், இயேசுவின் சிலுவை மரணம் பற்றி எழுதிய புத்தகத்தின் கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை 'கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை' என்ற தலைப்பில் சமீபத்தில் இஸ்லாமிய இணையப்பேரவை (IIP ONLINE) தமிழில் வெளியிட்டது.

அந்த கட்டுரைக்கு பதில் என்ற பெயரில் உமர் என்ற கிறிஸ்தவர் ஆங்கிலத் தளத்திலிருந்து எடுத்து மொழிப்பெயர்த்து வெளியிட்ட கட்டுரையின் முதல் பகுதி எந்த அளவுக்கு முரண்பாட்டையும், குழப்பத்தையும் கொண்டிருந்தது என்பதை 'உன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 1)' என்ற எமது பதில் கட்டுரையின் மூலம் வெளிச்சம்போட்டு காட்டி இருந்தோம்.

இஸ்லாமிய இணையப்பேரவை (IIP ONLINE) வெளியிட்ட அந்த கட்டுரையில் இயேசு முன்னறிவித்ததாகச் சொல்லப்படும் மற்றொரு அடையாளமான 'இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்தபின் 3 நாள் கழித்து உயிர்த்தெழுவார்' என்ற அதிசயம் இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஒத்துபோகாததுடன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் என்பது ஒரு வரலாற்றுப் புரட்டு என்பதையும் நிரூபித்திருந்தார்கள். அதையும் தனது மொழிப்பெயர்ப்புக் கட்டுரையின் மூலம் அந்த கிறிஸ்தவர் மறுத்திருந்தார்.

அந்த மறுப்புக்கட்டுரையில் எந்த அளவுக்கு பொய்கள் அவிழ்த்துவிடப்பட்டிருந்தது என்பதை விளக்குவதற்கு முன்பாக புனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு என்ற கட்டுரையின் மூலம் இயேசுவின் சிலுவை நம்பிக்கையில் உள்ள தெளிவான முரண்பாட்டை கூடுதல் ஆதாரங்களுடன் ஏகத்துவம் தளத்தில் விளக்கமளித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக கிறிஸ்தவர்களின் அந்த மறுப்புக்கட்டுரையின் ஆசிரியரும் அதை மொழிப்பெயர்ப்பு செய்த உமர் என்பவரும் விளக்கம் என்றப் பெயரில் செய்துள்ள தில்லு முல்லுகளை இனி காண்போம்.

அந்த மறுப்புக் கட்டுரையில் இந்த கிறிஸ்தவர், அஹமத் தீதாத் அவர்கள் இந்த ஆய்வில் தவறு செய்துவிட்டதாகவும், முதல் நூற்றாண்டு காலத்தில் இருந்த எபிரேயு பேச்சு வழக்கத்திற்கும் 20ம் நூற்றாண்டு ஆங்கில பேச்சுவழக்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கான தவறிவிட்டதாகவும், இதே போன்று தொடர்ந்து அவர் தவறு செய்வதாகவும், அந்த தவறை இவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகவும் (?) குற்றம் சாட்டுகின்றார்.
Quote:

தீதத் அவர்கள், முதல் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்த எபிரேய பேச்சு வழக்கத்திற்கும், இந்த இருபதாம் நூற்றாண்டு ஆங்கில பேச்சுவழக்கத்திற்கும் இடையே உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை காண தவறிவிட்டார். தீதத் அவர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட விவரங்கள் பற்றி விவாதிக்கும் போதெல்லாம், இந்த தவறை அடிக்கடி செய்கிறார் என்பதை நாம் கண்கூடாக காணமுடியும்.
மற்றோர் இடத்தில், யூதர்கள் எப்படி இரவு பகல் மற்றும் நாட்களை கணக்கிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளாமல், யூதர்கள் பேச்சு மற்றும் எழுதும் வழக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்ளாமல் அஹமத் தீதத் அவர்கள் மிகப்பெரிய தவறை (serious mistake) செய்துள்ளார்கள். அதே போல, இயேசு, தான் மூன்று நாட்கள் இரவும் பகலும் கல்லரையில் இருப்பேன் என்றுச் சொன்ன தீர்க்கதரிசனைத்தைப் பற்றி தீதத் அவர்கள் புரிந்துக்கொள்ளாமல் மறுபடியும் அதே தவறை செய்துள்ளார்கள்.

இப்படி தவறாக கணித்துவிட்டதாக அறிஞர். அஹமத் தீதாத்தின் மீது குற்றம் சுமத்தும் இவர், உன்மையில் அந்த நாள்கணக்கை எப்படி எடுக்கவேண்டும் - எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை பின்வருமாறு கூறுகின்றார்:

அதாவது, அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்கள் ஒரு நாளில் எந்த பகுதியையும் கணக்கிடும் போது, அதை ஒரு முழு நாளாகவே கணக்கிட்டனர், இந்த உண்மையை தீதத் அவர்கள் கண்டுபிடிக்க தவறிவிட்டார்கள். இயேசு கல்லரையில் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு பிற்பாடு வைக்கப்பட்டார், மற்றும் சனிக்கிழமை முழுவதும் கல்லரையில் இருந்தார், மறு நாள் அதாவது ஞாயிறு அன்று காலை உயிரோடு எழுந்தார். அதிகார பூர்வமான யூதர்களின் காலண்டரின் (நாட்காட்டி) படி, ஞாயிற்றுக்கிழமை என்பது சனிக்கிழமை மாலை பொழுது சாய்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. இதன் படி, இயேசு மூன்று நாட்கள் கல்லரையில் இருந்தார்.

மற்றோர் இடத்தில், நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில், யூதர்கள் சொல்வது போல, 'மூன்று நாட்கள் இரவும் பகலும்' என்று ஆங்கிலத்தில் அதே வழக்கத்தின் படி, அதே பொருள் படும் படி சொல்வதில்லை நாம் அந்த வார்த்தைகளின் பொருளை, அந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட முதல் நூற்றாண்டில் இருந்த எபிரேய மொழி எழுத்து மற்றும் பேச்சு வழக்கப்படி பொருள் கூறாமல், அன்று இருந்த வழக்கப்படி சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு இன்று நாம் பேசும் மொழியின் இலக்கணத்தின் படி, வேறு ஒரு மொழியின் அமைப்புப் படி பொருள் கூற முயலுவது தவறாகவே முடியும்
இன்னுமோர் இடத்தில், அக்காலத்தில் இப்படி இரவு பகல் என்றுச் சொல்வது எபிரேய மொழியில் இருந்த ஒரு பேச்சு வழக்கமாகும் (Figure of Speech in the Hebrew). இப்படிப்பட்ட பேச்சு வழக்க வார்த்தைகளைப் பற்றி ஆராயும் போது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட உவமானத்திற்கு(figures of speech), அதை சொன்னவர் என்ன பொருளில் கூறினார் என்பதை தெரிந்துக் கொள்ளாமல், இன்று நாம் அதற்கு சரியான பொருளை கூறமுடியாது. இயேசு சொன்ன அந்த தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு அந்த காலகட்டத்தில், அந்த காலச்சூழலில்(Context) என்ன பொருள் இருந்தது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மேலும், எபிரேய மொழியில் சொல்லப்பட்ட அந்த பேச்சு / எழுத்து வழக்கில் உள்ள ஒரு ஒற்றுமையை நாம் கவனித்தோமானால், இரவும் பகலும் என்றுச் சொல்லும் போது, இரண்டின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கும். அதாவது எத்தனை இரவுகளோ அத்தனை பகல்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்

மற்றோர் இடத்தில், ஆக, யூதர்களின் வழக்கப்படி 'மூன்று நாட்கள் இரவு பகல்' என்பது கண்டிப்பாக மூன்று முழு பகல்கள் மற்றும் முன்று முழு இரவுகள் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, இதற்கு பதிலாக முதல் நாளின் ஒரு பகுதியை ஒரு முழு நாளாகவும், மற்றும் மூன்றாம் நாளின் ஒரு பகுதியை ஒரு நாளாகவும் கணக்கிடுவார்கள்

இது இவர் செல்லவரும் கருத்து. அதாவது, இயேசு சொன்னதாக சொல்லப்படும் 3 இரவு 3 பகல் என்று நாம் பிரித்து பார்ப்பதால் அது தங்களது நம்பிக்கைக்கு எதிரானதாக – பைபிளுக்கு முரண்பாடாக - அமைகின்றது என்பதற்காக, அவர்களது குருட்டு நம்பிக்கைக்கு ஏற்றார் போல்தான் பைபிள் வசனத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லவருகின்றார். இது தான் சரியான நடைமுறை என்றும் சொல்லுகின்றார்.

  • அக்காலத்தில் இப்படி இரவு பகல் என்றுச் சொல்வது எபிரேய மொழியில் இருந்த ஒரு பேச்சு வழக்கமாகும்
  • நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில், யூதர்கள் சொல்வது போல, 'மூன்று நாட்கள் இரவும் பகலும்' என்று ஆங்கிலத்தில் அதே வழக்கத்தின் படி, அதே பொருள் படும் படி சொல்வதில்லை
  • ஆக, யூதர்களின் வழக்கப்படி 'மூன்று நாட்கள் இரவு பகல்' என்பது கண்டிப்பாக மூன்று முழு பகல்கள் மற்றும் முன்று முழு இரவுகள் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை,
இவர் சொல்வது போன்றுதான் பைபிள் முழுவதும் இருக்கின்றதா? அன்றைய எபிரேயு பேச்சு எழுத்து வழக்கம் அப்படித்தான் இருந்ததா? என்றால் கிடையாது. ஏனெனில் இவர் சொல்வது போல்தான் அன்றைக்கு இருந்தது என்றால் ஒட்டுமொத்த பைபிளிலும் 2 நாள் என்று சொல்லப்படுவதற்குப் பதில் 2 பகல் 2 இரவு என்றும் 3 நாட்களைக் குறிப்பதற்கு 3 பகல் 3 இரவு என்று மட்டுமே வந்திருக்க வேண்டும். அப்படியா வருகின்றதா? உதாரணமாக பின்வரும் வசனங்களை கவனியுங்கள்:

தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணத்தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான். ஆதியாகமம் - 30:36

நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான். யாத்திராகமம் - 8:27

மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான் அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று. யாத்தராகமம் - 10:22

அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம் போனார்கள் மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது. எண்ணாகமம் - 10:33

நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபது நாள் மாத்திரமல்ல, ..... - எண்;ணாகமம் - 11:19

ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லாரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள். எண்ணாகமம் - 20:29

இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள் மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது. உபாகமம் - 34:8

அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, ... யோசுவா - 9:16

ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் அவனை இருத்திக்கொண்டதினால், மூன்றுநாள் அவனோடிருந்தான். அவர்கள் அங்கே புசித்துக் குடித்து இராத்தங்கினார்கள். நியாயாதிபதிகள் -19:4

இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன். அங்கே மூன்றுநாள் தங்கியிருந்தோம். நான் ஜனங்களையும் ஆசாரியரையும் பாவையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை. எஸ்றா - 8:15

இது போல் எண்ணற்ற வசனங்களில் மூன்று நாள், நான்கு நாள் என்றுதான் வந்திருக்கின்றதே யொழிய இவர் சொல்வது போல் 3 இரவு 3 பகல் என்றோ 4 பகல் 4 இரவு என்றோ வரவில்லை? அது தான் அன்றைய நடைமுறை என்றால், ஏன் 3 நாள் 4 நாள் என்று வரவேண்டும்? இந்த வசனங்களும் பழைய ஏற்பாட்டின் எபிரேயு பேச்சு எழுத்து வழக்கில் எழுதப்பட்ட வசனங்கள் தானே? அன்றைய கால பேச்சு எழுத்து வழக்கு நீங்கள் சொல்வது போல் 1 நாளை குறிப்பதற்கு 1 பகல் 1 இரவு என்றும் 2 நாளை குறிப்பதற்கு இரண்டு பகல் இரண்டு இரவு என்று தான் சொல்லப்படும் என்றால் முழு பைபிளிலும் அப்படித்தானே வந்திருக்க வேண்டும்? அப்படி வரவில்லையே? அடுத்து இன்னொரு உதாரணத்தையும் பாருங்கள்:

பதினாராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். மத்தேயு - 20:6

இந்த வசனத்தில் 'பகல் முழுவதும் இங்கே நிற்கிறதென்ன' என்று தான் கேட்டதாக சொல்லப்படுகின்றதே யொழிய 1 நாள் முழுவதும் நிற்கிறதென்ன என்று கேட்டதாக சொல்லப்படவில்லை. இந்த கிறிஸ்தவர் விவாதிப்பது போல் // அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்கள் ஒரு நாளில் எந்த பகுதியையும் கணக்கிடும் போது, அதை ஒரு முழு நாளாகவே கணக்கிட்டனர்,// என்றால் இங்கே ஏன் பகல் முழுவதும் என்று சொல்ல வேண்டும்? ஒரு நாள் முழுவதும் என்று சொல்லியிருக்கலாமே?

பொதுவாக பைபிளின் சில இடங்களில் பகலும் இரவும் (days and nights) என்று பிரித்தார்போல் வருகின்றது. அப்படிப்பட்ட இடங்களில் அதே முறையின் படி பிரித்து தான் பார்க்கவேண்டுமே தவிர, மாறாக அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது, மாறாக ஒரு முழுநாளாகத்தான் கணக்கிடவேண்டும் என்று வாதிடுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

இது ஒருபுறமிருக்க, ஒரு வாதத்திற்காக நாம் இவர் சொல்லும் கருத்தின் படியே வருவோம்.

இவர் வாதப்படி அதாவது 3 பகல் 3 இரவு என்பதை பிரித்துப் பார்க்கக்கூடாது, மாறாக 3 இரவு 3 பகல் என்பதை ஒன்றினைத்து 3 நாள் என்று தான் கணக்கிடவேண்டும் என்கிறார். அதைத்தான் மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள அத்தனை இடத்திலும் அவர் சொல்லவரும் கருத்து. சரி இப்படி பார்த்தாலாவது இவர்கள் நம்பிக்கொண்டிருப்பதன் படி 3 நாள் என்பது சரியாக வருமா? என்றால் அதுவும் கண்டிப்பாக வராது. ஏன் என்றால், பைபிளின்படி ஒரு நாள் என்பது மாலை சூரியன் மறையத்தொடங்கியதிலிருந்து ஆரம்பமாகின்றது. (பார்க்க ஆதியாகமம் 1:5, லேவியராகமம் 23:32) இதை இந்த கிறிஸ்தவரும் ஒப்புக்கொள்கின்றார்:

Quote:

அதிகார பூர்வமான யூதர்களின் காலண்டரின் (நாட்காட்டி) படி, ஞாயிற்றுக்கிழமை என்பது சனிக்கிழமை மாலை பொழுது சாய்வதிலிருந்து ஆரம்பிக்கிறது.

இதன் படி பார்த்தால், அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு என்பவன் சூரியன் மறையத்தொடங்கிய பின்புதான் இயேசுவின் உடலைப் பெற்றுக்கொள்கின்றான் என்று பைபிள் கூறுகின்றது.

wbtc தமிழ் மொழிப்பெயர்ப்பின் மாற்கு 15:42 ம் வசனத்தில் பின்வருமாறு சொல்லப்படுகின்றது :

இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளான சனிக்கிழமைக்கு முந்திய நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய இராஜ்யம் வருவதற்காக காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் துனிந்து போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் - மாற்கு 15:42-43

அதன் பிறகு யூதர்களின் முறையின் படி சில சம்பிரதாயங்களை செய்துவிட்டு அடக்கம் பன்னுகின்றன். பின்னர் இயேசு கல்லறையில் வைக்கப்படும் போது அடுத்தநாள் தெடாங்கி விடுகின்றது. அதை பின்வரும் வசனம் தெளிவு படுத்துகின்றது.

அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது. ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. – லூக்கா 22:50-54

இவரது வாதத்தின் படியும் இந்த பைபிள் வசனங்களின் படியும் பார்த்தால்,

(வெள்ளி மாலை சூரியன் மறையத் தொடங்கியதும் அடுத்தநாள் தொடங்கிவிடுகின்றது, அதாவது அன்று இரவு அடக்கம் பன்னப்படுகின்றார். அன்று இரவு 10 சனி காலை முதல் மாலை வரை = சனிக்கிழமை) 1 நாள்,

(அடுத்து சனி மாலை சூரியன் மறையத் தொடங்கியதிலிருந்து இரவு தொடங்கி அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன்பே இயேசு உயிர்த்தெழுந்து விடுகின்றார் (அதை இவரது வாதப்படி ஒரு முழு ஞாயிற்றுக்கிழமையாகவே கணக்கிட்டுக்கொள்வோம்)ஆக, ஞாயிற்றுக்கிழமை = 1 நாள்.

மொத்தம் 2 நாட்கள்

இதன் படி பார்த்தாலும் நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது போல் 3 நாள் எங்கே வருகின்றது? மொத்தம் 2 நாட்கள் தானே வருகின்றது? நீங்கள் இரண்டு நாட்களில் உயிர்தெழுந்ததாகச் சொல்லுகின்றீர்களா? அல்லது 3 நாட்களில் உயிர்த்தெழுந்ததாகச் சொல்லுகின்றீர்களா? உங்களது வாதப்படி நீங்கள் சொல்லும் முறையின் படி பார்த்தாலும் கணக்கு உதைக்கின்றதே? இப்பொழுது சொல்லுங்கள் இது அப்பட்டமான முரண்பாடு தானே? அப்படி யானால் இயேசு உயிர்த்தெழுந்ததாக சொல்லப்படுவது பச்சைப் பொய்தானே?

அடுத்து இன்னொன்றையும் இங்கே சொல்லியாக வேண்டும். அதாவது, இவர் ஒரு பச்சைப் பொய்யை தனது மறுப்புக் கட்டுரையில் சொல்லி அப்பாவி கிறிஸ்தவர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றார். அதாவது, இயேசு அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை மதியத்திற்குப் பிற்பாடு என்கிறார்.

Quote:

இயேசு கல்லரையில் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு பிற்பாடு வைக்கப்பட்டார்,
இது பச்சைப் பொய் இல்லையா? பைபிள் அப்படியா சொல்லுகின்றது. சூரியன் மறையத்தொடங்கியதும் தான் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பே இயேசுவின் உடலை வாங்குகின்றான் (மாற்கு 15:42-43 - WBTC மொழிப்பெயர்ப்பு) அதன் பிறகு யூதர்களின் சம்பிதாயப்படி சில செய்கைளை செய்துவிட்டு பின்னர் இயேசுவை அடக்கம் பண்ணுகின்றான். அதற்குள் கண்டிப்பாக இரவு வந்துவிடும். அதை தான் ஓய்வு நாளும் ஆரம்பமாயிற்று (லுக்கா 22:54) என்று சொல்லப்படுகின்றது. இவரும் சூரியன் மறையத்தெடங்கியதும் அடுத்த நாள் ஆரம்பமாகிவிடும் என்றும் ஒத்துக்கொள்கின்றார். இதன் படி பார்த்தாலும் இயேசு அடக்கம் செய்யப்பட்டது என்பது கண்டிப்பாக இரவு (இவரது கணக்குப்படி சனிக்கிழமை தொடங்கியதும்) என்பது தெளிவாக விளங்கும்.

ஆனால் இந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் இதை தமிழில் மொழிப்பெயர்த்த உமர் என்ற கிறிஸ்தவரும் எப்படிப்பட்ட ஒரு பொய்யை – பச்சைப் பொய்யை - மக்கள் மத்தியில் திணிக்கின்றார்கள் என்று பார்த்தீர்களா? இவரின் விளக்கத்தைப் (?) படிக்கின்ற ஒரு அப்பாவிக் கிறிஸ்தவன் என்ன நினைப்பான்? ஆஹா! என்ன அருமையான விளக்கம்? என்று தானே நினைப்பான். அவனுக்கு பைபிலும் தெரியாது, அதில் உள்ள குழப்பமும் தெரியாது. காரணம் அவனுக்கு போதிக்கப்படுவது அப்படி. ஆனால் உன்மை என்ன? சிந்திக்க வேண்டாமா?

எப்படிப்பட்ட பச்சைப் பொய்யை - அது தெளிவான முரண்பாடு என்று தெரிந்தும் அதை எப்படியாவது மறைத்தாக வேண்டும் என்பதற்காக எப்படி எல்லாம் பைபிள் வசனங்களையே திரித்து எழுதுகின்றனர் என்று பார்த்தீர்களா? இதற்கெல்லாம் காரணம் என்ன? எப்படியாவது தங்களிடம் மிச்ச மீதி உள்ள அப்பாவிக் கிறிஸ்தவர்களையாவது எமாற்றி தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற தந்திரம் தானே?

எனவே இந்த 3 பகல் 3 இரவு என்னும் காலக்கணக்கு என்பது அப்பட்டமான முரண்பாடு என்பதுடன் இதை வைத்து இயேசு சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்தெழுந்தார், அதன் மூலம் எங்களது ஜென்மப்பாவம் மண்ணிக்கப்பட்டது என்று சிறிஸ்தவர்கள் சொல்வது அப்பட்டமான பொய் என்பதும் தெளிவாக விளங்கும். இப்படிப்பட்ட தவறான நம்பிக்கையில் இருக்கும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு நேர்வழி காட்ட இறைவனிடம் பிரார்த்திப்போம்.


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Wednesday, March 11, 2009

புனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு


உன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 2)

கிறிஸ்தவ தளத்துக்கு பதில்

தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ்தவர்களுக்கு குர்ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு இஸ்லாத்தை எடுத்துரைத்தவருமான காலம் சென்ற இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர். அஹமத் தீதாத் அவர்கள், இயேசுவின் சிலுவை மரணம் பற்றிய அவர்களின் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக 'WHAT WAS THE SIGN OF JONAH? என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். அந்த புத்தகத்தின் கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை சமீபத்தில் இஸ்லாமிய இணையப்பேரவை (IIP ONLINE) தமிழில் வெளியிட்டது.

இந்த கட்டுரைக்கு பதில் என்ற பெயரில் உமர் என்ற கிறிஸ்தவர் ஆங்கிலத் தளத்திலிருந்து எடுத்து மொழிப்பெயர்த்து வெளியிட்ட கட்டுரை எந்த அளவுக்கு முரண்பாட்டையும், குழப்பத்தையும் கொண்டிருந்தது என்பதை 'உன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 1)' என்ற எமது பதில் கட்டுரையின் மூலம் வெளிச்சம்போட்டு காட்டி இருந்தோம்.

சகோதரர்.அஹமத் தீதாத் அவர்கள், மேற்சொல்லப்பட்ட தனது புத்தகத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னரும் உயிருடன் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை பைபிளின் வசனத்தின் மூலம் நிரூபிக்கும் அதே வேலையில் மற்றொரு உன்மையையும் அதில் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்கள். அதாவது, இயேசு முன்னறிவித்ததாகச் சொல்லப்படும் 3 பகல் 3 இரவு என்ற அடையாளம் இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஒத்துபோகாததுடன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் என்பது ஒரு வரலாற்றுப் புரட்டு என்பதையும் நிரூபித்திருந்தார்கள். ஆனால் அதையும் தனது மொழிப்பெயர்ப்புக் கட்டுரையின் மூலம் அந்த கிறிஸ்தவர் மறுத்திருந்தார். அந்த மறுப்பும் எந்த அளவுக்கு முரண்பாடானது குழப்பம் நிறைந்தது என்பதை இனி பார்ப்போம்:

இயேசுவிடம் ஒரு அடையாளத்தைத் காட்டும் என்று வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது :

இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். - மத்தேயு 12:39

For as Jonas was three days and three nights in the whale's belly; so shall the Son of man be three days and three nights in the heart of the earth

அதாவது, யோனா தீர்க்கதரிசி மீனின்வயிற்றில் உயிருடன் இருந்தது போல தானும் 3 பகல் 3 இரவு (3 days and 3 nights) பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்கிறார். இந்த 3 பகல் 3 இரவு என்ற காலக்கணக்கை வைத்து தான் பல அப்பாவிக் கிறிஸ்தவர்கள், இயேசு தான் சொன்னதன் படியே சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்த்தெழுந்தார், அதன் மூலம் தங்களது 'ஆதிபாவம்' என்னும் ஜென்ம பாவம் மண்ணிக்கப்பட்டது என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். இப்படித்தான் கிறிஸ்தவ மிஷினரிகள் அவர்களின் அறியாமையைப் பயன் படுத்தி நம்பவைத்துக்கொண்டிருக்கின்றன. இது தான் இன்றைய கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையும் கூட. இதை நம்பாதவன்; மோட்சம் அடைய மாட்டான் என்று சொல்வதுடன், நம்மையும் இவ்வாறு நம்புங்கள், இல்லை என்றால் நீங்கள் பரலோக இரஜ்யத்தை அடைய முடியாது என்று பூச்சாண்டி காட்டுவோரும் உண்டு. அதனால் தான் வருடந்தோரும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி என்றும், அதற்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் அதாவது இயேசு மூன்று நாள் கழித்து உயரித்தெழுந்த தினம் என்றும் கொண்டாடுகின்றனர்.

இந்த நம்பிக்கை சரியா? இவர்கள் சொல்வது போன்று தான் பைபிளும் கூறுகின்றதா? இன்றைய அப்பாவிக் கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பது போல் உன்மையிலேயே இயேசு 3 இரவு 3 பகல் பூமியில் இருதயத்தில் இருந்து பின்னர் உயிர்த்தெழுந்தாரா? அவர் முன்னறிவித்த காலக்கணக்கு பைபிளுடன் ஒத்துப்போகின்றதா? புனித வெள்ளியும் ஈஸ்டர் தினமும் சரியானது தானா? என்பதை எல்லாம் பைபிளின் ஒளியில் சற்று விரிவாக ஆராய்வோம்.

இயேசுவை சிலுவையில் அறைந்தது வெள்ளிக்கிழமை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று 3ம் மணி வேலையாக இருந்த போது அவரை சிலுவையில் அறைந்ததாக பைபிளில் சொல்லப்படுகின்றது :

அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது. - மாற்கு 15:25

அதன்பிறகு சில மணி நேரம் கழித்து அவர் இறந்து விடுவதாகவும், அதன் பின்னர் அரிமத்தியாக்காரனான யோசேப்பு என்பவன் வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையத் தெடாங்கிய பின் இயேசுவின் உடலைக் கேட்டதாகவும், பின்னர் அவரது உடலைப் பெற்றுக்கொணடு அடக்கம் செய்ததாகவும் பைபிளில் சொல்லப்படுகின்றது:

யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான். அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான். அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது. ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. – லூக்கா 23:50-54

அதாவது இயேசு கல்லலையில் வைக்கப்படும் போது இரவு ஆரம்பமாகிவிட்டது என்பதைத் தான் ஓய்வு நாளும் ஆரம்பமாயிற்று (அதாவது சனிக்கிழமை ஆரம்பமாயிற்று) என்று இங்கே சொல்லப்படுகின்றது. ஏனெனில் பைபிளின் படி ஒரு நாள் என்பது மாலை சூரியன் மறையத்தொடங்கியதிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. (பார்க்க ஆதியாகமம் 1:5, லேவியராகமம் 23:32)

WBTC மொழிப்பெயர்ப்பின் மாற்கு 15:42ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது :

இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளான சனிக்கிழமைக்கு முந்திய நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய இரஜ்யம் வருவதற்காக காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் துனிந்து போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் - மாற்கு 15:42-43

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வசனங்களின் மூலம் இயேசு அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை இரவு என்பது மிகத் தெளிவாக விளங்கும். ஏனெனில் யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் இயேசுவின் உடலைக் கேட்கும் போதே சூரியன் மறையத்தொடங்கிவிட்டது - இருட்டத் தொங்கிவிட்டது - என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது. அதன் பின் அவன் யூதர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படும் போது கண்டிப்பாக இரவு வந்துவிடும் - அடுத்தநாள் தொடங்கிவிடும் என்பது தெளிவாக விளங்கும்.

அதன் பின்னர் இயேசு எப்போது உயிர்த்தெழுந்தார் என்பதை பைபிளில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள் - யோவான் 1:20

உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், - லூக்கா 24:3

அதாவது இந்த வசனங்களின் மூலம் ஞாயிற்றுக்கிழமை விடிவதற்கு முன்பே - சூரியன் உதயமாவதற்கு முன்பே - இயேசு உயிர்த்தெழுந்ததாக பைபிளின் எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வசனங்களின்படி பார்த்தால் இயேசு பூமியின் இருதயத்தில் - கல்லறையில் எத்தனை நாட்கள் இருந்திருப்பார்? அவர் முன்னறிவித்ததன்படி இருந்தாரா அல்லது அதற்கு மாற்றமாக இருந்தாரா? அதை ஒரு இலகுவான கணக்கின்படி பார்ப்போம்:

-------------------------------------------------------------------------
-----இயேசு உடல் கல்லறையில் இருந்த நாட்கள்---------பகல்-----இரவு---
-------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------வெள்ளிக்கிழமை---------------------------------------இல்லை---1-இரவு--
--------------------------------------------------------சனிக்கிழமை-------------------------------------------1 பகல்---1 இரவு
--------------------------------------------------------------------------
----ஞாயிற்றுக்கிழமை------------------------------------- இல்லை---இல்லை
------------------------------------------------------------------------------- ------------------------------------------மொத்தம்------1 பகல்---2 இரவு

மேலே நாம் பார்த்த கணக்கின்படி இயேசு பூமியின் இருதயத்தில் (அதாவது கல்லறையில்) இருந்தது வெறும் 1 பகல் 2 இரவுகள் மட்டுமே என்பது தெளிவாக விளங்கும். ஆனால் மத்தேயு 12:39ம் வசனத்தின் படி இயேசு 3 பகல் 3 இரவு பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்று முன்னறிவித்தாரே? அப்படி இருந்தாரா? பைபிளின் அவரது கடைசிகால நிகழ்வுகள் அப்படித்தான் இருந்தார் என்று சொல்லுகின்றதா? இல்லையே! மாறாக 1 பகல் 2 இரவுகள் மட்டும் தான் பூமியின் இருதயத்தில் (கல்லறையில்) இருந்ததாக ஒன்றல்ல நான்கு சுவிஷேஷங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இது இயேசுவின் சிலுவை கொள்கையில் உள்ள அப்பட்டமான முரண்பாடு இல்லையா? அது மட்டுமல்ல, இந்த யோனா சம்பந்தப்பட்ட வசனம் இயேசு உயிருடன் இருப்பதை குறிக்காது. மாறாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கணக்கை மட்டும் தான் குறிக்கும் என்று சொன்ன கிறிஸ்தவர்களே, இந்த காலக்கணக்கும் உங்கள் குருட்டு நம்பிக்கைக்கு எதிராகத்தானே இருக்கின்றது? அதைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டாமா?

இயேசு சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்த்தெழுந்தார். அதன் மூலம் கிறிஸ்தவர்களின் ஜென்ம பாவம் மண்ணிக்கப்பட்டது என்பதும், அதை நம்பாதவன் மோட்சம் அடைய மாட்டான் என்பதும் இன்றயை கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கை. இதைச் சொல்லித்தான் இன்றைய கிறிஸ்தவ மிஷினரிகள் பல அப்பாவி மக்களை ஏமாற்றி மதம் மாற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்த கொள்கை இல்லை என்றால் இன்றைய கிறிஸ்தவமே கிடையாது என்கிற அளவுக்கு மிக முக்கியமான கொள்கையில் இப்படிப்பட்ட அப்பட்டமான முரண்பாடு வரலாமா? இந்த சம்பவம் உன்மையிலேயே நடந்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்குமா?

மறுப்பும் விளக்கமும் படிக்க இங்கே அழுத்தவும்



கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Thursday, March 05, 2009

நோவா காலத்து வெள்ளப்பிரளயம் : முரண்படும் பைபிள்

பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் முஸ்லிம்களால் சுட்டிக்காட்டப்படுவதை நியாய உணர்வுடன் சிந்திக்க மனமில்லாமல் அதை எப்படியாவது மறுத்தாகவேண்டும் என்பதற்காக சமீபத்தில் கிறிஸ்தவர்கள் நோவாவின் வரலாற்றில் குர்ஆன் முரண்படுகின்றது என்று எழுதி தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டனர். அவர்கள் சொல்லவருவது போல் உன்மையில் குர்ஆன் முரண்படுகின்றதா? அல்லது அவர்களது அறியாமையின் வெளிப்பாடா? என்பதை ஆதாரங்களுடன் விளக்கி இருந்தோம். அதைப் பின்வரும் தொடுப்புகளின் மூலம் அறியலாம்:


நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா?

நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?

நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி குர்ஆனில் முரண்பாடு என்று எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் எழுதும் உமர் என்ற கிறிஸ்தவர், ஏன் பைபிளில் அதே நோவாவின் வரலாற்றில் உள்ள முரண்பாடுகளை கண்டுக்கொள்ள தவறினார்? என்பதற்கு காரணம் என்னவோ இறைவனுக்கே வெளிச்சம்.

ஏனென்றால் அவர் அரைகுறை அறிவுடன் - முரண்பாடே இல்லாமல் குர்ஆனின் மீது குற்றம் சுமத்த முற்படும் போது, அதை விட இமாலயத்தவறுகள் பைபிளில் இருப்பதை ஏன் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றார்? பைபிளில் இதே நோவாவின் வரலாற்றில் உள்ள முரண்பாடுகள் இவரது கண்களுக்கு எப்படித் தெரியாமல் போனது?



முரண்பாடு - 1



நோவா பேழைக்குள் எப்பொழுது பிரவேசித்தார்?

ஜலப்பிரளயத்திற்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள். தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன. ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று. (ஆதியாகமம் 7:7-10)

இந்த வசனங்கிளில் நோவா பேழைக்குள் பிரவேசித்ததன் பின்னர் ஏழு நாள் கழித்தே ஜலப்பிரலயம் வந்தது என்று செல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர் முரணாக அடுத்த வசனங்களிலேயே ஜலப்பிரளயம் தொடங்கிய அன்றுத்தான் பேழைக்குள் சென்றதாக சொல்லப்படுகின்றது:

நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன. வானத்தின் மதகுகளும் திறவுண்டன. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள். (ஆதியாகமம் 7:11-13)

இதில் எது சரி? நோவாவும் மற்றவர்களும், உயிரினங்களும் கப்பலுக்குள் சென்றப்பின் ஏழு நாள் கழித்து ஜலப்பிரளயம் ஏற்பட்டதா? அல்லது ஜலப்பிரளயம் தொடங்கிய அன்று தான் பேழைக்குள் பிரவேசித்தார்களா? ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட ஒரே ஆகாமத்தில் எப்படி இந்த முரண்பாடு வந்தது?

முரண்பாடு - 2



எத்தனை ஜோடி உயிரினங்கள் நோவாவுடன் பேழைக்குள் ஏற்றுமாறு கர்த்தரால் சொல்லப்பட்டது?



சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள். (ஆதியாகமம் 6:19)

இந்த வசனத்தில் எல்லா உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வோரு ஜோடியாக கப்பலில் ஏற்றிக்கொள்ளுமாறு சொல்லப்படுகின்றது. ஆனால், அதற்கு மாற்றமாக ஆதியாகமம் 7:2 ம் வசனத்தில் ஏழு ஏழு ஜோடிகளாக ஏற்றிக்கொள்ளும் என்று சொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது:

கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள். இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும், ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். - (ஆதியாகமம் 7:1-3)

இதில் எது சரி? கப்பலில் ஏற்றச்சொன்னது ஒவ்வொரு ஜோடிகளையா? அல்லது ஏழு ஏழு ஜோடிகளையா? மேலே உள்ள வசனத்தில் அனைத்து உயிரினங்களிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியை மட்டும் ஏற்றச்சொன்னதாக சொல்லபட்பட்டிருக்க அதற்கு மாற்றமாக ஏழு ஏழு ஜோடியை பேழையில் ஏற்றுமாறு கூறியதாக சொல்லப்படுவது எப்படி? இதில் எது சரி?


முரண்பாடு - 3



நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தின் போது (கப்பலில் ஏறியவர்களைத் தவிர) பூமியில்இருந்த அனைத்து உயிரினங்களும் அழிந்ததா? இல்லையா?


அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின் நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. – ஆதியாகமம் 7:21-23

இந்த வனங்களின் மூலம் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தின் போது கப்பலில் ஏறியவர்களைத் தவிர மற்ற பூமியில் இருந்த அத்தனை உயிரினங்களும் அழிந்துப் போய்விட்டது என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக பூமியில் வாழ்ந்த 'இராட்சதர்கள்' என்பவர்கள் நோவாவின் காலத்திற்குப் பிறகும் பல வருடங்கள் கழித்தும் வாந்தார்கள் என்று கூறப்படுகின்றது.

அந்நாட்களில் இராட்சதர் (Nephilium) பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். – ஆதியாகமம் 6:4

இந்த வசனத்தில் நோவாவின் காலத்தில் வெள்ளப் பிரளயம் ஏற்படுவதற்கும் முன்னர் இராட்சதர்கள் (மற்ற ஆங்கில மொழிப்பெயர்ப்புகளில் Nephilium என்று மொழிப்பெயர்கப்பட்டுள்ளது) என்பவர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் ஏனேக்கின் வம்சாவழியினர் என்று பைபிளில் குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் நோவாவுடன் பேழையில் ஏற்றப்படவில்லை. ஏனெனில் நோவாவுடன் அவரது குடும்பத்தார் மட்டுமே ஏற்றப்பட்டதாக பைபிளில் சொல்லப்படுகின்றது (பார்க்க ஆதியாகமம் 6:18, 7:7,13,14) ஆனால் இந்த Nephilium என்னும் பலவான்கள் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்திற்குப் பின்னரும் வாழ்ந்தார்கள் என்று பைபிளில்; சொல்லப்படுகின்றது.

கர்த்தர் மோசேயை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திதரருக்குக் கொடுக்கும் கானான் தேசத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார். மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான் அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள். (எண்ணாகமம் 13:1-2)

தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும் அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள் தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். (எண்ணாகமம் 13:18-20)

அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள். - (எண்ணாகமம் 13:18)

அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் (Nephilium) கண்டோம் நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம். (எண்ணாகமம் 13:33)

இந்த வசனங்களில் (Nephilium என்னும்) இராட்சதர்களை தாங்கள் பார்த்ததாக இஸ்ரவேல் தலைவர்கள் சொன்னதை இந்த வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், ஆதியாகமம் 7:21-23ம் வசனத்தில், பேழையில் ஏற்றப்பட்டவர்களைத்தவிர வேறு யாரும் உயிருடன் இருக்கவில்லை. பூமியில் வாழ்ந்து அனைத்து உயிரினங்களும் இறந்துவிட்டது என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் அனைத்து உயிரினங்களும் அழிக்கப்பட்டதாக மேலே சொல்லப்பட்டிருக்க அதற்கு மாற்றமாக அவர்களுக்குப் பின்னும் அதே இராட்சத பிறவியான Nephilium என்பவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்கள் அழிக்கப்பட்டார்களா? இல்லையா?

எண்ணாகமத்தில் வாழ்ந்ததாக சொல்லப்படுவது சரியா? அல்லது ஆதியாகமத்தில் உயிரினங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது என்று சொல்லப்படுவது சரியா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!
.

இறைவன் நாடினால் தொடரும்...
.

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Tuesday, March 03, 2009

நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?

குர்ஆனில் முரண்பாடா?

கிறிஸ்தவ தளத்துக்கு பதில்

பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் முஸ்லிம்களால் சுட்டிக்காட்டப்படுவதை நியாய உணர்வுடன் சிந்திக்க மனமில்லாமல் அதை எப்படியாவது மறுத்தாகவேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ மிஷினரிகள் குர்ஆனில் ஏதேனும் முரண்பாடு கிடைக்குமா என்று தேடத்தொடங்கியதன் விளைவு, தற்போது நோவாவின் வரலாற்றில் குர்ஆன் முரண்படுகின்றது என்று எழுத தொடங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடாகத்தான் 'குர்ஆனில் முரண்பாடு - நோவாவின் வயது?' என்று அவர்களால் சமீபத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த பதிவு எந்த அளவுக்கு பலவீனமான வாதங்களை கொண்டிருந்தது என்பதை எமது பதில் பதிவான 'நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா? என்ற கட்டுரையின் மூலம் விளக்கமளித்திருந்தோம். அதே போன்று அதே நோவாவின் வரலாற்றில் மற்றுமொரு குழப்பம் இருக்கின்றது என்று மேலும் ஒரு பதிவை ஆங்கிலத்தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் வெளியிட்டிருக்கின்றனர். அதுவும் எந்த அளவுக்கு பலவீனமான வாதத்தைக் கொண்டுள்ளது என்பதை இனி பார்ப்போம்:

அல்லாஹ் தனது திருமறைக்குர்ஆனில் நூஹ் (அலை) அவர்களின காலத்தில் நடந்த சம்பவத்தை பின்வருமாறு கூறுகின்றான்:

இன்னும்; நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம். -அல்குர்ஆன் 25:37

மற்றோர் வசனத்தில்: நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள். - அல்குர்ஆன் 26:105

இந்த வசனங்களில் இறைவன் நூஹ் நபியுடைய காலத்தவர்கள் இறைத்தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று பன்மையாக கூறுகின்றான்.

இதைப்பற்றி உமர் என்ற கிறிஸ்தவர் எழுதும் போது:

நோவாவின் சமுகத்தார்கள் நிராகரித்த இந்த இதர தூதர்கள் யார்?

பைபிள் நோவாவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசுவதில்லை. குர்ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது.

இப்படி குறிப்பிட்டு விட்டு கீழ்கானும் வசனத்தைக் கேடிட்டுக்காட்டி அதன் மூலம் ஒரு கேள்வியையும் முன் வைக்கின்றார்:

இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்;. அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம். (குர்ஆன் 21:76)

மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். -அல்குர்ஆன் 37:77

இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?

இது தான் இவரது கேள்வி. இந்தக் கேள்வியின் மூலம் இவரது அறியாமை வெளிக்காட்டப்படுவதுடன் - குர்ஆனை எப்படியேனும் குற்றம் சுமத்தியாகவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மட்டுமே இந்தக் கேள்வி கேட்கப்படுகின்றது என்பதும் தெளிவாக விளங்கும். எனினும் இவரது இந்தக் கேள்விக்கு பதில் மிக எளிதானது. ஏனெனில் 'தூதர்கள்' என்றால் யார் யார்? தூதர்கள் என்று பன்மையாக சொல்லப்படுவது ஏன்? என்று விளங்கிக் கொண்டால் பதில் கிடைத்துவிடும்.

அதற்கு முன்பாக இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?' என்று கேள்விக்கான பதில், அந்த தூதர்கள் யாரும் வெள்ளத்தில் முழ்கடிக்கப்படவில்லை. காரணம் நூஹ் (அலை) அவர்களின சமுதாயத்திற்கு நூஹ் (அலை) அவர்களைத் தவிர வேறு யாரும் அனுப்பப்படவில்லை. எனவே இந்த கேள்விக்கு வேலையே இல்லை.

அப்படியானால், குர்ஆன் ஏன் பன்மையில் தூதர்கள் என்று குறிப்பிடுகிறது? அவ்வாறு குறிப்பிடப்படும் அந்த தூதர்கள் என்பவர்கள் யார்? அதையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

குர்ஆனின் ஒரு வசனத்திற்கு அதன் பிற வசனங்கள் விளக்கமாக இருக்கும். அல்லது நபி மொழிகள் அதற்கு விளக்கமாக அமையும். ஆனால் இந்த கிறிஸ்தவரோ இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் அவ்வசனத்தில் கூறப்பட்ட 'தூதர்கள்' என்ற ஒரு வார்த்தையை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு 'பார்த்தீர்களா முரண்பாடு உள்ளது' என்று பிதற்றுவது குர்ஆனில் குறை காணவேண்டும் என்ற குறுமதியின் வெளிப்பாடு மட்டுமே!

இவர் குறிப்பிடும் அந்த வசனத்தில் 'நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது' என்று குறிப்பிடப்படுகின்றது. அந்த தூதர்கள் என்பவர்கள் யார்? என்பதை மற்ற குர்ஆன் வசனங்களை கவனித்தாலே உன்மை விளங்கும்.

இவ்வாறு பன்மையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இன்னும் சில வசனங்கள்:

நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்। அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது; ''நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?'' 26:105, 106


ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது; ''நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று கூறியபோது 26:123, 124

ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்; ''நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' எனக் கூறியபோது 26:140,141

லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்; ''நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று கூறியபோது, 26:160,161

தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள். ஷுஐப் அவர்களிடம்; ''நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?'' எனக் கூறியபோது 26:176,177

நூஹ் உடைய சமூகத்தவர்கள் தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று கூறிய போது அவர்களுக்கிடையே வாழ்ந்திருந்த தூதரைப் பற்றிக் கூறும் போது நூஹ் (அலை) பற்றி மட்டுமே குறிப்பிடுகிறான்.

ஸமூது சமுதயாத்தினர் தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று குறிப்பிட்டு விட்டு அவர்களுக்கிடையே செய்தியைச் சொன்னவரைப் பற்றிக் கூறுகையில் ஸாலிஹ் (அலை) அவர்களை மட்டும் குறிப்பிடுகிறான்.

லூத் நபியின் சமூகத்தைப் பற்றியும் மத்யன் வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போதும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து நமக்குத் தெரிய வரும் செய்தி என்ன? ஒவ்வவொரு சமூகத்தவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதரைப் பொய்ப்பிப்பது என்பது மனித சமூகத்துக்கு அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களையும் பொய்ப்பிப்பதற்கு சமம் என்பதாகும்। இக்கருத்தைத் தான் பிரபல திருமறை விரிவுரையாளரான இமாம் இப்னு கஃதீர் (ரஹ்) அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

(Allah destroyed them completely, and similar (awaits) the disbelievers) (47:10). And when the people of Nuh denied him, Allah destroyed them likewise, for whoever denies one Messenger denies all the Messengers, because there is no difference between one Messenger and another. If it had so happened that Allah had sent all His Messengers to them, they would have denied them all. (Tafsir Ibn Kathir – English version – Darusssalam)

இறைதூதர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கமும் அவர்கள் கொண்டு வந்த செய்தியும் ஒன்றாக இருக்கும் போது அவர்களில் ஒருவரை நிராகரித்தல் மற்ற அனைவரையும் நிராகரிப்பதற்குச் சமமே!

உதாரணமாக, முஹம்மது (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்டு, ஈஸா (அலை) மூஸா (அலை) அவர்களை ஏற்றுக்கொள்ள வில்லையானால், இறைவனால் அனுப்பப்பட்ட மொத்த தூதர்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் பொருளாக அமையும். எனவே அவர் முஸ்லீமாக - இறைநம்பிக்கைக் கொண்டவராக முடியாது. அதே போல் முஸா (அலை) மற்றும் ஈஸா (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டுவிட்டு முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரித்தால் அவர்களும் இறைநம்பிக்கைக் கொண்டவர்களாக - முஸ்லீமாக முடியாது. அதே போல் இறைதூதர்களான வானவர்களை (குர்ஆன் 7:37, 11:69, 11:77,11:81, 81:19) ஏற்க மறுத்து நிராகரிப்பவர்களும் இறைநம்பிக்கையுடையவர்களாக ஆக முடியாது. காரணம் இறைவனால் அனுப்பபட்ட தூதர்கள் அனைவரும் ஒரே செய்தியைத்தான் கொண்டுவந்தார்கள். அவர்கள் போதித்ததெல்லாம் ஒரே கொள்கையைத்தான் என்று குர்ஆன் கூறுகின்றது:

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ழைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். 16:36

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. 21:25

இவர்களில் ஒருவரை ஏற்றுக்கொண்டு ஒருவரை நிராகரித்தாலும் அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாக ஆக முடியாது. அதைத் தான் பின்வரும் வசனங்களின் மூலம் இறைவன் தெளிவுபடுத்தப்படுகின்றது:

நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, ''நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்'' என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்;. காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். – அல்குர்ஆன் 4:150,१५१

யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும்விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும் நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின்கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார் அது, தனக்குமுன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது இன்னும் அது வழிகாட்டியாகவும்,நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (2:97)

எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும்,ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறுநிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (2:98)

பொதுவாக இறைநம்பிக்கைக் கொண்டவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இறை தூதர்களான வானவர்கள் (குர்ஆன் 7:37, 11:69, 11:77,11:81, 81:19) உட்பட அனைத்து இறைத் தூதர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

(இறை) தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர் இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள் - 2:285

(முஃமின்களே!)''நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்'' என்று கூறுவீர்களாக -2:136

இதில் இறைவனின் செய்தியைக் கொண்டுவரும் ஒருவரை நிராகரித்தால் கூட அவர்கள் இறைநம்பிக்கைக் கொண்டவர்களாக - முஸ்லீம்களாக முடியாது என்பது தெளிவாக விளங்கும். அவர்களுக்கு அனுப்பபட்ட தூதர்களை ஏற்றுக்கொண்டு மற்ற தூதர்கள் பற்றி சொல்லும் போது அதை ஏற்க முடியாது என்று சொன்னாலும், எனக்குப் பின் இந்த தூதர் வருவார் என்று நம்பமறுத்தாலும், இறைதூதர்களான வானவர்களையும் ஏற்க முடியாது என்று சொன்னாலும் அதுவும் இறைவனின் தூதர்களை நிராகரித்தவர் என்று தான் பொருள்படும். இன்னும் சொல்லப்போனால் ஒருவர் ஒரு தூதரை நிராகரிக்கின்றார் என்று சொன்னால் அவர் மற்றவர்களையும் நிராகரிக்கின்றார். அந்த மற்றவர்களில் வானவர்களும் அடங்குவர் நபிமார்களான மனிதர்களும் அடங்குவர்.

அது போல் தான் நூஹ் (அலை) அவாகளின் சமுதாயத்தினார் நூஹ் அவர்களை நிராகரித்ததுடன் மற்ற இறைத்தூதர்களான வானவர்கள் உட்பட, மற்ற தூதர்களையும் (அவர்களுக்கு பின்னர் வர இருப்பவர்களையும்) அவர்களும் போலிகள் தான் அவர்களை நம்பமாட்டோம் என்று நிராகரிக்கின்றனர். இதை தான் இறைவன் 'நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது' என்று கூறுகின்றான்। எனவே இவர் கேட்பது போன்று மற்ற தூதர்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்விக்கே இங்கு வேலை இல்லை என்பது தெளிவாக விளங்கும்। ஏனெனில் நூஹ் அவர்கள் சமுதாயத்திற்கு அவர்கள் மட்டும் தான் அனுப்பப்பட்டார்கள்।

அடுத்து இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இந்த உமர் என்ற கிறிஸ்தவர் எழுதும் போது குர்ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது. என்று குறிப்பிடுகின்றார். இது முற்றிலும் தவறான – அறைவேக்காட்டுத்தனமாக வாதம். இவர் சொல்வது போன்று தான் குர்ஆன் குறிப்பிட்டுக் கூறுகின்றதா என்றால் கிடையாது. மாறாக அவரது குடும்பத்தாரையும், அவரை ஏற்றுக்கொண்டவர்களையும் காப்பாற்றினோம் என்று தான் குறிப்பிடுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) ''உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்'' என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவில்லை. (அல்குர்ஆன் - 11:40) (மேலும் பார்க்க 7:64, 10:73)

எனவே இவர் எந்த அளவுக்கு அறைகுறை ஞானத்துடன் கேள்விகளைக் கேட்கின்றார் என்பது இதன் மூலம் தெளிவாக விளங்கும்.

உமர் என்ற கிறிஸ்தவர் இப்படி குற்றநோக்குடன் அறியாமையில் ஏன் பதிவுகள் போடுகின்றார் என்றால், பெரும்பாலும் அவர் சுயமாக எதையும் எழுதுவது கிடையாது। ஆன்சரிங் இஸ்லாம் என்றத் தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழ் மக்களைக் குழப்புவது தான் இவரது தலையாய பணி. இதற்காகவே இவருக்கு வெளிநாட்டிலிருந்து கூலிகள் கிடைக்கின்றது போலும். இவர் மொழிப்பெயர்த்து வெளியிடும் கட்டுரைகள் சரியா அல்லது தவறா? நாம் போடுவது முறையான பதில் தானா? என்றெல்லாம் இவர் பார்ப்பது கிடையாது. இஸ்லாத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகின்றதா? குர்ஆனில் முரண்பாடு என்று சொல்லப்படுகின்றதா? அது போதும். அது சரியோ அல்லது தவறோ அதை ஒரு பதிவாகப் போட்டுவிட வேண்டியது தான் என்று மனம் போனப் போக்கில் மொழிப்பெயர்த்து வெளியிட்டுவிட்டு பின்னர் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றார். பாவம் அவர் என்ன செய்வார். வாங்கும் கூலிக்கு வேலை செய்துதானே ஆக வேண்டும்.

நோவாவின் வரலாற்றில் முரண்படும் பைபிள் - அடுத்த பதிவில் இறைவன் நாடினால்...
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Thursday, February 26, 2009

நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா?

கிறிஸ்தவ தளத்துக்கு பதில்
.
.
பைபிளின் மீது முஸ்லிம்களால் வைக்கப்படும் எண்ணிலடங்கா முரண்பாடுளுக்கும் - குழப்பங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு எப்படியேனும் குர்ஆனின் மீது குற்றம் சுமத்தியாகவேண்டும் அதில் எப்படியாவது முரண்பாடுகளைக் கண்டுபிடித்து அவர்களை திணரடித்துவிட (?) வேண்டும் என்ற நோக்கத்துடன் சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷினரிகளால் குர்ஆனில் முரண்பாடு என்று தங்கள் தளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றது. அதில் நோவா (நூஹ் நபி) சம்பந்தப்பட்ட பதிவை உமர் என்ற கிறிஸ்தவர் 'குர்ஆன் முரண்பாடுகள் - நோவாவின் வயது' என்ற தலைப்பில் ஆங்கிலத் தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் வெளியிட்டிருந்தார். அதாவது குர்ஆன் நோவாவின் வயதை சொல்வதில் முரண்படுகின்றதாம்.

இவர்கள் எந்த அளவுக்கு தரம்தாழ்ந்த - பலவீனமான விமர்சனங்களை குர்ஆனின் மீதும் இஸ்லாத்தின் மீதும் வைக்கின்றார்கள் என்பதற்கு இந்த ஒன்றே சரியான சான்று. அவர்கள் கண்டுபிடித்துள்ள அதிபாயங்கரமான - இடியாப்ப சிக்கல் நிறைந்த (?) முரண்பாட்டை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

Quote:

பைபிளிலும் மற்றும் குர்ஆனிலும் சொல்லப்பட்ட நோவாவின் கதையை ஒருவர் படித்தால், கீழ் கண்ட விவரங்களை அவர் காண வேண்டி வரும்.

ஜலப்பிரளத்துக்குப் பின்பு நோவா முந்நூற்று ஐம்பது (350) வருஷம் உயிரோடிருந்தான்.நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது (950) வருஷம்; அவன் மரித்தான். (ஆதியாகமம் 9:28-29)

மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)

நோவாவின் வயது 950 என்று முஹம்மது கேள்விப்பட்டு இருக்கிறார். ஆனால், அதை அவர் சரியாக புரிந்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும் அல்லது இந்த விவரத்தை குர்ஆனில் சேர்க்கும் போது அவரது நியாபக சக்தி குறைந்துவிட்டு இருக்கவேண்டும். வெள்ளம் ஏற்பட்டபோது தான் நோவாவிற்கு இந்த வயது (950) இருந்தது என்று முஹம்மது கருதிவிட்டார்.

சூரா 29:14ம் வசனம் கீழ் கண்ட விதமாக நிகழ்ச்சிகளை சொல்கிறது

நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்
அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;
அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது

வசனத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள 'அவர்கள் மத்தியில்' என்ற விவரமானது, வசனத்தின் முதல் பாகத்தில் உள்ள 'அவருடைய சமூகத்தாரிடம்' என்பவர்களை குறிக்கிறது. பெரு வெள்ளமானது அம்மக்களை அழித்துவிட்டபின்பு, நோவா அவர்களுடம் வாழவில்லை என்பது திண்ணம். ஆக, 950 வருடங்கள் என்பது பெரு வெள்ளம் வரும்வரையுள்ள காலத்தைக் குறிக்கிறது. இந்த முறையில் தான் அனேக குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனத்தை புரிந்துக்கோண்டு இருக்கிறார்கள்.

என்ன அபாரமான கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எப்படி அலசி ஆராய்ந்து முரண்பாட்டைக் கண்டுபிடித்துள்ளனர் என்பதை பார்த்தீர்களா? குர்ஆனில் 29:14ம் வசனத்தில் முரண்பாடாம். எங்கே முரண்பாடு வருகின்றது? இந்த வசனத்திற்கு எதிரான - முரண்பட்ட குர்ஆன் வசனம் எது? ஒன்றுமே கிடையாது. 'காமாலைக் கண் கொண்டவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சல்' என்பது போல, குர்ஆனில் எங்கேயாவது முரண்பாடு கிடைக்குமா? என்று தேடியவருக்கு இந்த வசனம் முரண்பாடாக தெரிந்துவிட்டது போலும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் :

மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;. ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)

இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் இரண்டு விஷயங்களை தெளிவு படுத்துகின்றான். ஒன்று நூஹ் (அலை) அவர்களின் மொத்த வயது. மற்றொன்று அவர்கள் காலத்தில் நடந்த பெரு வெள்ளம்.

இதில் என்ன முரண்பாட்டை இவர்கள் கண்டுவிட்டனர்? அல்லாஹ் தனது திருமறையில் 'நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் (அதாவது 950 ஆண்டுகள்) தங்கியிருந்தார்' என்கிறான். 'அவருடைய சமூகத்தார்' என்றால் யார்? நூஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டவர்களையும் குறிக்கும், நிராகரித்தவர்களையும் குறிக்கும், பெருவெள்ளத்திற்கு பின் மீதமிருந்தவர்களையும் குறிக்கும். மொத்தத்தில் அச்சமூகத்தார் என்பது நோவா உயிருடன் இருக்கும் பொழுது அவருடன் வாழ்ந்த அத்தனை மக்களையும் குறிக்கும் என்பது பாமரனுக்கும் விளங்கும்.

இதில் என்ன முரண்பாடு இருக்கின்றது?

இவர்களது அபார கண்டுபிடிப்பு (?) என்ன வென்றால், குர்ஆனின் இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள 950 வருடம் என்பது வெள்ளப்பிரளயம் வரையிலும் தான் குறிக்கும், அவர்களின் முழு வயதையும் குறிக்காது. எனவே இது முரண்பாடான வசனம் என்கிறார். இது தான் இவர் சொல்லவரும் கருத்து. அதை மற்றுமொரு இடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:

Quote:

இந்த குர்ஆன் 29:14ம் வசனத்தை இன்னும் கவனித்துப்பார்த்தால், இன்னொரு விவரமும் தெரியவரும். இவ்வசனத்தின்படி 950 வருடங்கள் என்பது நோவாவின் வயதை குறிப்பதாகத் தெரியவில்லை, அதற்கு பதிலாக, அவர் தன் சமுதாய மக்களுக்கு எச்சரித்த கால அளவை குறிப்பதாக உள்ளது, அதாவது இறைவன் அம்மக்களை எச்சரிக்க அவரை அழைத்த கால முதல், பெரு வெள்ளம் வரையுள்ள கால அளவாகும்

ஒரு வாதத்திற்காக இவர் விளங்கி இருப்பது போன்றே வைத்துக்கொள்வோம். இவர்களின் அபார கண்டுபிடிப்பின் படி இந்த வசனம் வேறு எந்த குர்ஆன் வசனத்துடன் முரண்படுகின்றது? அதையல்லவா தெரிவித்திருக்க வேண்டும். முரண்பாடு என்றால் என்ன? ஒரு வசனம் மற்றோர் வசனத்திற்கு முரண்பட வேண்டும்.

ஒரு குர்ஆன் வசனத்தில் நூஹ் (அலை) (நோவா) அவர்களின் மொத்த வயதே 950 என்று சொல்லிவிட்டு மற்றோர் குர்ஆன் வசனத்தில் பெரு வெள்ளம் நிகழ்ந்த பொழுது அவர்களது வயது 950 என்று சொல்லியிருந்தால் முரண்பாடு எனலாம். மாறாக, எந்த ஒரு வசனத்தையும் காட்டாமல் குர்ஆனின் இந்த 29:14ம் வசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு குர்ஆனில் முரண்பாடு, முஹம்மது (ஸல்) அவர்கள் ஞாபக மறதியால் சொல்லிவிட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? சற்று சிந்திக்க வேண்டாமா? முரண்பாடு என்று சொல்வதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?

உமர் அவர்களே! உன்மையில் முரண்பாடு என்றால் என்னத்தெரியுமா? இதோ உங்கள் பைபிளை வைத்தே நீங்கள் குறிப்பிட்டுள்ள நோவாவின் வயதை வைத்தே விளக்குகின்றேன் படியுங்கள்:

பைபிளில் கர்த்தர் சொல்லுகின்றார்:

அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை, அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். - ஆதியாகமம் 6:3

இந்த வசனத்தில் மனிதன் உலகத்தில் வழப்போகிற நாட்கள் மொத்தமே 120 வருடம் தான் என்று பைபிள் குறிப்பிடுகின்றது. ஆனால் நோவா வாழ்ந்ததோ 950 வருஷம் என்று ஆதியாகமம் 9:29 ல் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? மனிதனின் மொத்த ஆயுளே 120 தான் என்றால், பின்னர் எப்படி நோவா 950 வருடம் வாழ்ந்தார்? ஒரே ஆகாமத்தில் - ஒரே ஆசிரியரால், அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்பட்ட பைபிளில் இப்படிப்பட்ட முரண்பாடு வராலமா? உன்மையிலேயே கர்த்தரால் தான் இந்த வசனங்கள் அருள்பட்டிருந்தால் இந்த முரண்பாடு வருமா? இல்லை எழுதியவருக்கு ஞாபகக் குழப்பமா?

அடுத்து அதே ஆதியாகமத்தில் அதற்கடுத்த வசனத்தில் உள்ள முரண்பாடுகளைப் பாருங்கள் உமர் அவர்களே:

பைபிள் கூறுகின்றது : தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. - ஆதியாகமம் 6:6

கர்த்தர் தான் மனிதனையே படைத்தார். அவன் என்னென்ன செய்வான் உங்களைப் போன்றவர்களெல்லாம் வசனங்களைத் திரித்தும் மாற்றியும் எப்படி எல்லாம் அப்பாவிக் கிறிஸ்தவர்களை ஏமாற்றுவார்கள், முரண்பாடு இல்லாததை எப்படி எல்லாம் முரண்பாடு என்று சொல்லுவார்கள் என்பதை எல்லாம் முற்றும் அறிந்த கடவுள் நாம் ஏன் மனிதனைப் படைத்தோம் என்று மணஸ்தாபப்படுவாரா? கடவுள் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை எல்லாம் அறியாத பலவீனரா? ஆனால் அப்படி பலவீனரைப்போன்று தெரியாமல் படைத்துவிட்டோமே என்று மனஸ்தாபப்பட்டார் என்று பைபிள் கூறுகின்றது. இந்த வசனத்திற்கு நேர் முரணாக பைபிளில் உள்ள மற்ற வசனங்களைப் பாருங்கள்:

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை, தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை, மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். - 1 சாமுவேல் 15:29

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன் நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். - எசேக்கியேல் 24:14

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? - எண்ணாகமம் 23:19

கர்த்தர் மனஸ்தாபப்படுவாரா? மாட்டாரா? ஆனால் மேலே ஆதியாகமம் 6:6ம் வசனத்தில் அவர் மனிதனைப் படைத்ததற்காக மனஸ்தாபப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இங்கே உள்ள வசனங்களில் மனஸ்தாபப் பட அவர் என்ன பலவீனங்கள் நிறைந்த மனிதனா என்கிறது? எதுய்யா சரி?

இவைதான் உங்கள் பைபிளின் லட்சனம். (இது வெறும் Sample முரண்பாடுகள் தான். விரைவில் தொடர்ந்து வரும்) இப்படி முரண்பட்ட புத்தகத்தைத் தான் நீங்கள் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள். இந்த பைபிளை வைத்துக்கொண்டு குர்ஆனில் முரண்பாடு என்கிறீர்கள். முரண்பாடு என்றால் என்னவென்று முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். பின்னர் முரண்பாட்டைப் பற்றி எழுதுங்கள் அல்லது மொழிப்பெயர்ப்பு செய்யுங்கள்.



கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Tuesday, February 17, 2009

உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 1)

கிறிஸ்தவ தளத்திற்கு பதில்

தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ்தவர்களுக்கு குர்ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு இஸ்லாத்தை எடுத்துரைத்தவருமான காலம் சென்ற இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர். அஹமத் தீதாத் அவர்கள், கிறிஸ்தவத்தைப் பற்றி தான் செய்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக சொல்லப்படும் சம்பவத்தை மிக ஆழமாக ஆராய்ந்து அதில் உள்ள முரண்பாடுகளையும், குழப்பங்களையும் அதில் ஏற்படக்கூடிய சந்தேகங்களையும் எடுத்துரைத்ததன் மூலம் உலக கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த கட்டுரைகள் பல இன்றைய இஸ்லாமியப் பிரச்சாரகர்களுக்கு மிகவும் உறுதுணையாகவும், உதவியாகவும் இருக்கின்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இயேசுவின் சிலுவை மரணம் பற்றிய அவர்களின் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகத்தான் WHAT WAS THE SIGN OF JONAH? என்ற புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்தது. அந்த புத்தகத்தின் கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை 'கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை' என்ற தலைப்பில் சமீபத்தில் இஸ்லாமிய இணையப்பேரவை (IIP ONLINE) தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டது.

இந்தக் கட்டுரைக்கு எப்படியேனும் பதில் அளித்தாகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில், உமர் என்ற கிறிஸ்தவர் அந்தப் புத்தகத்தின் கருத்துக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத, ஒரு கட்டுரையை ஆன்சரிங் இஸ்லாம் என்ற தளத்திலிருந்து எடுத்து மொழிபெயர்த்து 'அஹமத் தீதாத்திற்கு பதில்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். ஒரு கட்டுரைக்கு 'பதில்' என்று போடுவதற்கு முன் அந்தக் கட்டுரைக்கும் அந்த பதிலுக்கு ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா? அது சரியானது தானா? அந்த பதில் பொருத்தமான பதில் தானா? என்பதை சற்று படித்துப்பார்ப்பது தான் ஒரு மொழி பெயர்ப்பளருக்கு அழகு. அது அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களை எப்படியாவது திருப்தி படுத்தியாக வேண்டும் என்பதற்காக (பைபிளில் சொல்லப்பட்டுள்ள நோவா, லோத்து, இயேசு போன்றோர் அருந்தியதாகச் சொல்லப்படும்) திராட்சைரசத்தை (WINE) அருந்தி விட்டு போதை மயக்கத்தில் மொழி பெயர்ப்பது அறிவுடமையாகாது என்பதை சம்பந்தப்பட்ட கிறிஸ்தவருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவர் பதில் என்றப் பெயரில் வெளியிட்டுள்ள கட்டுரை எந்த அளவுக்கு அபத்தமானது, முரண்பாடனது - குழப்பம் நிறைந்தது என்பதை இனி பார்ப்போம்.

இயேவிடம் ஒரு அடையாளத்தைத் தாரும் என்று வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது :

இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். - மத்தேயு 12:39

அஹமத் தீதாத் அவர்கள் தனது புத்தகத்தில், மேற்சொல்லப்பட்டுள்ள இயேசுவின் கருத்தை மிக ஆழமாக ஆராய்ந்து உண்மையில் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் இந்தக் கூற்றுப்படி அவர் மரித்திருக்கவே முடியாது என்பதுடன் 3 இரவு 3 பகல் என்ற கணக்கும் இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஒத்துப் போகவில்லை என்பதை மிகத் தெளிவாக தனது புத்தகத்தில் நிரூபிக்கின்றார்கள். ஆனால் அதை நியாயமான பார்வையுடன் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் எப்படியாவது இதை மறுத்தாக வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் பதில் எழுதத் துணிந்த அந்த கிறிஸ்தவர் தனக்குத் தானே முன்னுக்குப் பின் முரணாக முரண்பட்டு எழுதுகின்றார் :

Quote:

//இந்த தலைப்பை பார்த்தவுடன், அந்த தலைப்பைப் பற்றி மிகவும் அதிகமாக ஆராய்ச்சி செய்து அவர் எழுதியிருக்கக்கூடும் என்று வாசகர்கள் எண்ணக்கூடும். ஆனால், உன்மையில் தீதத் அவர்கள் தான் கேட்ட கேள்விக்கு தானே பதில் சொல்லாமல், இயேசு சொன்ன வார்த்தைகளைத் தாக்கி, இயேசு கூறியதை மறுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். //
இப்படி கூறக்கூடிய இந்த எழுத்தாளர் முதலில் பைபிளில் உள்ள யூதர்கள் கேட்ட கேள்வியையும், அதற்கு இயேசு அளித்த பதிலையும், இது பற்றி அஹமத் தீதாத் சொல்லவரும் விளக்கத்தையும் சற்று நிதானமாக படித்திருக்க வேண்டாமா?

யூதர்கள் கேட்டது என்ன? வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். - (மத்தேயு 12:38) அதற்கு இயேசு என்ன பதில் சொன்னார்? யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சென்னதுடன் அடுத்த இடத்தில் அதே இயேசு சற்று விளக்கமாக 'யோனா இரவும் பகலும் மூன்றுநாள் (3 இரவு 3 பகல்) ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் (3 இரவு 3 பகல்) பூமியின் இருதயத்தில் இருப்பார்.' என்றார்.

இங்கே யூதர்களின் கேள்வி அதிசயத்தைப் பற்றியது. அதற்கு இயேசு சொன்ன பதில் யோனா தீர்க்கதரிசியின் அடையாளம் தான் உங்களுக்குத் தருவேன் என்கிறார். அதாவது 'யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல நானும் பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்கிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம்? யோனா என்ன அதிசயம் செய்தார்? இயேசுவால் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு யோனா அப்படி என்ன அதிசயம் செய்துவிட்டார்? 3 இரவும் 3 பகலும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். எப்படி இருந்தார்? அதிசயமான முறையில் உயிரோடு இருந்தார். எந்த அளவுக்கென்றால் சாதாரனமாக ஒருவன் இதுபோன்ற நிலைக்கு ஆளானால் எப்படி அவனால் உயிருடன் இருக்க முடியாதோ அதற்கு நேர் மாற்றமாக இறை அதிசயத்துடன் எந்த ஒரு பாதிப்பும் இன்றி மீனின் வயிற்றில் உயிருடன் இருந்து உயிருடன் வெளிவருகின்றார். அதே போன்று நானும் இருப்பேன் என்று இயேசு, யோனாவை உதாரனமாக காட்டி மக்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றார்.

இங்கே இயேசு சொல்லக்கூடிய 'யோனாவின் அதிசயமேயன்றி...' என்ற வார்த்தையின்படியும் 'யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல' என்ற வார்த்தையின்படியும் பார்த்தால் அவரும் உயிரோடுதான் இருந்திருப்பார் - இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல இயேசுவிடம் யூதர்கள் கேட்ட கேள்வி என்ன? ஒரு அடையாளத்தைத் தாரும் என்று. அந்த கேள்விக்குத்தான் இயேசு, யோனாவைப் போன்றே நானும் பூமியல் இருதயத்தில் இருப்பேன்' என்று ஒரு அடையாளத்தைச் சொல்கின்றார். அதாவது அவர்கள் கேட்டது அடையாளத்தைப் பற்றியது. அதற்கு இயேசு சொன்னது யோனாப் போன்று அதே அடையாளத்தைச் செய்வேன் என்று. இடையில் உள்ள வித்தியாசம் அவர் மீனின் வயிற்றில் இருந்தார். இவர் பூமியின் இருதயத்தில் இருப்பார். ஆனால் இருவரும் உயிர் வாழ முடியாத இடத்தில் உயிரொடு இருப்பதான ஒரே அதிசயத்தைத்தான் செய்வார்கள். இது தான் இயேசு சொல்லவரும் கருத்து.

இதற்கு இவ்வாறு பொருள் கொள்ள கூடாது, இந்த வசனத்தின் மூலம் 3 இரவு 3 பகல் என்றக் காலக்கணக்கை மட்டும்தான் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் சாதாரனமாக இரவும் பகலும் 3 நாள் என்று இயேசு சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே? நாள் கணக்கைச் சொல்வதில் என்ன அடையாளம் இருக்கின்றது? யோனாவின் அதிசயத்தில் நாள் கணக்கிற்கு என்ன முக்கியத்துவம் இருக்கின்றது? யோனா 3 நாளுக்கு பதில் 4 நாட்கள் இருந்திருந்தாலும் 1 நாட்கள் இருந்தாலும் 2 நாட்கள் இருந்திருந்தாலும் அவரது அதிசயம் நாள் கணக்கை வைத்தா அல்லது அவர் மீனின் வயிற்றில் உயிருடன் இருந்ததை வைத்தா? யோனா இரவும் பகலும் 3 நாட்களுக்கு பதில் இரவும் பகலும் 4 நாட்களோ அல்லது அல்லது 5 நாட்களோ இருந்திருந்தால் அவர் இறந்திருப்பாரா? இங்கே நாள் கணக்கு முக்கியமா அல்லது அவர் உயிருடன் இருந்த அதிசயம் முக்கியமா? ஏன் யோனாவை குறிப்பிட்டுச்சொல்லி அவர் எப்படி இருந்தாரோ அப்படி இருப்பேன் என்று இயேசு சொல்ல வேண்டும்? அதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அவசியம் என்ன?

எனவே, யோனாவின் அதிசயம் தான் அதில் முக்கியமாக கணக்கிடப்பட வேண்டுமே யொழிய நாள் கணக்கை மட்டும் முக்கியத்துவப்படுத்தக் கூடாது. யோனா மீனின் வயிற்றில் உயிருடன் இருந்தது போல நானும் உயிருடன் இருப்பேன் எனபது தான் இதன் பொருள். இதில் என்ன குழப்பம் இருக்கின்றது.
இந்த கிறிஸ்தவர் குற்றம் சுமத்துவது போல் எங்கே 'இயேசு சொன்ன வார்த்தைகளைத் தாக்கி இயேசு கூறியதை மறுப்பதற்கு முயற்சி செய்கின்றார்' அஹமத் தீதாத்? இது பச்சைப் பொய் இல்லையா? இயேசுவின் வார்த்தையை மறுப்பதற்கு அஹமத் தீதாத் முயற்சி செய்கின்றாரா? அல்லது இவர் முயற்சிக்கின்றாரா?

Quote:

//அவரது வாதங்கள் அனைத்தும் அவரது இரண்டு யூகங்களுக்குள் அடங்கிவிடும். முதலாவதாக, யோனா மீனின் வயிற்றில் அந்த மூன்று நாட்கள் உயிரோடு இருந்திருந்தால், சிலுவையிலிருந்து இயேசுவை இறக்கி அவரை கல்லரையில் வைத்த பிற்பாடு இயேசு உயிரோடு இருந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு, அதைத் தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் உயிரோடு எழுந்திருந்தால், கல்லரையில் இருந்த அந்த இடைப்பட்ட காலமானது மூன்று நாட்கள் இரவும் பகலுமாக இருக்காது என்பது தான். //

உங்கள் குருட்டு நம்பிக்கையையும் முரண்டு பிடித்தலையும் ஒதுக்கி வைத்து விட்டு அஹமத் தீதாத் யூகத்தின் அடிப்படையில் சொல்கின்றாரா அல்லது ஆதாரத்துடன் சொல்கின்றாரா என்பதை அவரது புத்தகத்தை முழுவதுமாக மீண்டும் ஒரு முறை படியுங்கள். உன்மை புரியும்.

Quote:

//அஹமத் தீதத் தன் புத்தகத்தில், மேலே சொன்ன விவரங்களை எடுத்து, புதிய ஒரு வியாக்கீனத்தைத் தருகிறார், அதாவது 'யோனா எப்படியோ... அதே போல மனுஷகுமாரனும் (As Jonah was ... so shall the Son of man be)" என்று கூறுகிறார்.

இயேசு தனக்கும் யோனாவிற்கும் இருக்கும் ஒற்றுமை என்பது அவர் மூன்று நாட்கள் எப்படி அந்த மீனின் வயிற்றில் இருந்தாரோ, அது போல, தானும் கல்லரையில் இருப்பார் என்பதைப் பற்றியதே அல்லாமல் வேறுவகையில் இல்லை. //
அஹமத் தீதாத் சுயவியாக்கியானம் தருகின்றாரா அல்லது இவர் சுயவியாக்கியானம் தருகின்றாரா? 'யோனாவைப் போல நானும் இருப்பேன் என்றால் என்ன அர்த்தம்? யோனா எப்படி இருந்தாரோ அப்படி இருப்பேன் என்று வராமல் வேறு என்ன அர்த்தம் வரும்? நீங்கள் காலம் காலமாக குறுட்டு நம்பிக்கையில் இருக்கின்றீர்கள் என்பதற்காக உங்களது தவறான நம்பிக்கைக்கு மாற்றமான பைபிளின் வசனத்தை வைத்து தெளிவு படுத்தினால் அது சுயவியாக்கியனமாகிவிடுமா? 'பைபிளில் இயேசு சொன்ன வார்த்தையை நம்பமாட்டேன், நாங்கள் காலம் காலமாக என்ன நம்பிக்கையில் இருக்கின்றோமோ அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறுதான் பைபிள் வசனத்தை அர்த்தம் கொள்வோம்' என்றால் பிறகு ஏன் புரோட்டஸ்ட்டன்டாக மாறினீர்கள்? பழைய ரோமன் கத்தோலிக்க மதத்திலேயே இருந்து ரோமன் கத்தோலிக்க பழக்க வழக்கங்களையே பின்பற்றி இருக்கலாமே? பைபிள் வசனம் உங்கள் நம்பிக்கைக்கு சாதகமாக இருந்தால் 'ஆஹா! என்ன அருமையான விளக்கம்' என்பீர்கள், பாதகமாக இருந்தால் 'சுயவியாக்கியானம்' என்று சொல்லிவிடுவீர்களோ?

Quote :

// ஆனால், இந்த முக்கியமான விவரத்தை தீதத் அவர்கள் எடுத்துவிட்டு, மற்ற விதங்களில் கூட யோனாவும் இயேசுவும் ஒன்று தான் என்றுச் சொல்கிறார், எப்படியென்றால், அந்த மூன்று நாட்கள் எப்படி யோனா உயிரோடு இருந்தாரோ அதே போல, இயேசுவும் என்று தன் சொந்த கற்பனையைச் சொல்லியுள்ளார் //

இப்படி எழுத இந்த கிறிஸ்தவ எழுத்தாளருக்கு எப்படி மனம் வந்தது? சரி எழுதியவர் தான் எழுதிவிட்டார், அதை மொழி பெயர்த்த மொழி பெயர்ப்பாளருக்கு எங்கே போனது புத்தி? அதாவது 'இந்த முக்கியமான விவரத்தை தீதத் அவர்கள் எடுத்துவிட்டு' என்று சொல்லுகின்றார். அது என்ன முக்கியமான விவரம் என்றால், 3 இரவு 3 பகல் (Time Factor) என்ற கால அளவை மட்டும் தான் இந்த வசனம் குறிக்கும் என்பதை அஹமத் தீதாத் விட்டுவிட்டாராம். அஹமத் தீதாத் எப்பொழுது அதை விட்டார். இந்த விளக்கத்தின் தொடர்ச்சியாக அடுத்து அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் விவாதமே இந்த 3 இரவு 3 பகல் என்ற (Time Factor) கால அளவைப் பற்றித் தானே? இதை புரியாமல் எப்படி இவர் மொழி பெயர்த்தார். அஹமத் தீதாத்தைப் பொருத்தவரை இந்த மத்தேயு 12:39 வசனத்தின் படி, யோனவின் அடையாளம் போன்று இயேசு உயிருடன் இருக்கவேண்டும், அடுத்து 3 இரவு 3 பகல் என்பது இன்றைய கிறிஸ்தவ நம்பிக்கைக்கு ஒத்துப்போகாது என்பது தான். அதைப் பற்றித்தான் விரிவாக விளக்கமளிக்கின்றார். ஆனால் இந்தக் கிறிஸ்தவரோ அஹமத் தீதாத் அந்த (Time Factor) கால அளவை சொல்லாதது போன்று மக்களை ஏமாற்றத் முயற்சிக்கின்றார். இதற்காகத்தான், நாம் சொல்கின்றோம் பைபிளில் சொல்லப்பட்டுள்ள திராட்சை ரசத்தை (Wine) அருந்துவதை நிறுத்திவிட்டு மொழிபெயர்க்கட்டும் என்று.

Quote:

//இயேசு சொன்ன வார்த்தைகளை முழுவதுமாக நாம் படிப்போமானால், தனக்கும் யோனாவிற்கும் சொல்லப்பட்ட ஒற்றுமையானது, அந்த மூன்று நாட்களைப் பற்றி குறிக்குமே அன்றி, வேறு வகையில் குறிக்காது என்பதை புரிந்துக்கொள்ளலாம். //

இது பச்சைப் புரட்டு இல்லையா? 'யோனாவைப் போல' என்று இயேசு சொன்ன வார்த்தை இவர்களது நம்பிக்கைக்கு ஒத்துப் போகவில்லை என்பதால் அந்த அர்த்தம் வராதாம்? முதலில் உங்கள் குருட்டு நம்பிக்கையை தூக்கி போட்டுவிட்டு பைபிளை நன்றாக படித்துப் பாருங்கள். இல்லை என்றால் உங்கள் பழைய ரோமன் கத்தேலிக்க மதத்திற்கே சென்று விடுங்கள்.
Quote:

//எப்படி யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தாரோ அது போல, இயேசுவும் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பார் என்பது தான் சரியான அர்த்தமாகும். //

அதைத்தான் சொல்கின்றோம். இயேசு எப்படி இருப்பார்? உயிரோடா அல்லது இறந்தா? யோனா எப்படி இருந்தார்? உயிருடனா அல்லது இறந்துவிட்ட நிலையிலா? யோனாவின் அடையாளம் போல் நானும் இருப்பேன் என்றால் என்ன அர்த்தம்? யோனா மீனின் வயிற்றில் உயிரோடு இருந்ததும், இயேசு பூமியின் இருதயத்தில் இறந்த நிலையில் இருப்பதும் எப்படி சமமான அடையாளமாக இருக்கும்? இதற்கு ஏன் யோனாவை அடையாளமாக காட்டவேண்டும்? காலக் கணக்கிற்கும் அடையாளத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் எப்படி எழுதத் துனிந்தார் இந்த கிறிஸ்தவர்?

Quote:

//ஆனால், இதனை தீதத் அவர்கள் சொல்வது போல, வியாக்கீனம் செய்யமுடியாது, அதாவது யோனா எப்படி உயிரோடு இருந்தாரோ அதே போல இயேசுவும் உயிரோடு இருந்திருக்கவேண்டும் என்று வியாக்கீனம் செய்யமுடியாது//

தீதாத் சொல்லவில்லை. பைபிள் சொல்கின்றது. நான் யோனாவைப் போன்று உயிருடன் இருப்பேன் என்று இயேசு சொல்கின்றார். ஆனால் உங்கள் குருட்டு நம்பிக்கை அதை ஏற்க மறுக்கின்றது. அது தான் உன்மை.

Quote:

//அஹமத் தீதத் அவர்கள் சொல்வது போல, இயேசு சொல்லவில்லை, மற்றும் இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு அப்படி பொருளும் இல்லை. இன்னும் இதைப் பற்றி மிகவும் தெளிவாக இயேசு வேறு ஒரு இடத்திலும் கூறியுள்ளார். அதாவது, தன்னை சிலுவையில் அறைவார்கள் என்பதை விளக்க ஒரு முறை இயேசு கீழ் கண்டவாறு சொல்லியுள்ளார்.

Quote:
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். (யோவான் 3:14-15) //


அதாவது அஹமத் தீதாத் தவறு செய்து விட்டாராம். உன்மையில் இயேசு சொன்னதற்கு வேறு அர்த்தமமாம். அது என்ன வேறு அர்த்தம்? அதற்கு ஆதாரம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள யோவான் 3:14-15ம் வசனமாம்.

இவர் எடுத்துக்காட்டக்கூடிய இந்த வசனத்திலும் கூட அவர் உயர்த்தப்படுவேன் - lifted up என்றுத்தான் சொல்கின்றாரேயொழிய இவர் சொல்வது போல் சிலுவையில் அறைந்து மரணமடைந்து பின்னர் உயர்த்தப்படுவேன் என்று செல்லவில்லையே! இந்த வசனம் அஹமத்தீதாத்தின் கருத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கின்றதேயொழிய நீங்கள் சொல்லும் கருத்திற்கோ அல்லது உங்கள் குறுட்டு நம்பிக்கைக்கோ ஆதரவாக இல்லையே!

அதுமட்டுமல்ல, இந்த 'உயர்த்தப்படுவேன்' என்பதற்கு 'சிலுவையில் அறையப்படுதல்' என்று பொருள் கொண்டாலும் அதுவும் இவர்களது வாதத்திற்கு வலுசேர்க்காது. காரணம் சிலுவையில் அறைப்படுவார் என்பதால் அதன் பிறகு அவர் இறந்துவிடுவார் என்று அர்த்தம் கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஏனெனில், சிலுவையில் அறைந்தபின்பும் மரிக்காமல் உயிருடன் இருப்பேன் என்று யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தை வைத்து முன்னறிவிப்பும் செய்கின்றார் இயேசு. அதையே பைபிளில் வரும் அவரது இறுதிகால சம்பவங்களும் உறுதிபடுத்துகின்றது.

அதாவது, இயேசுவை சிலுவையில் அறையும் போது அவரது கையிலும் காலிலும்தான் ஆனிகளால் அறையப்பட்டதாக கிறிஸ்தவர்கள் சொல்கின்றார்களேயொழிய வயிற்றிலோ அல்லது நெஞ்சிலோ அல்லது தலையிலோ அறையப்பட்டதாக சொல்லவில்லை. அப்படி இருக்கையில் யாராவது கையிலும் காலிலும் ஆணி அறைந்த சில மணி நேரங்களிலேயே இறந்து போவார்களா? ஒரு நாளோ அல்லது இரண்டுநாட்களோ ஒருவன் சிலுவையில் இருந்தால் முழு இரத்தமும் வெளியேறி இறந்து போக வாய்ப்பு இருக்கின்றது என்று நம்பலாம். ஆனால் இயேசு அப்படியா? சில மணி நேரங்களிலேயே இறந்ததாக பைபிள் எழுத்தாளர்கள் சொல்லுகின்றனர். இது எப்படி சாத்தியமாகும்? இன்னும் சொல்லப்போனால், இயேசுவோடு வேறு இரண்டு குற்றவாளிகளும் சிலுவையில் அறையப்பட்டதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் அவர்கள் இறந்துபோக வில்லையாம். ஆனால் இயேசு மட்டும் இறந்துவிட்டாராம்?

அது மட்டுமல்ல 'இவ்வளவு சீக்கிரம் ஒருவர் இறப்பாரா' என்று இயேசுவை சிலுவையில் அறைய காரணமானவர்களில் ஒருவரான பிலாத்துவே சந்தேகித்ததாகவும் பைபிள் சொல்கின்றது (பார்க்க லூக்கா 15:44) ஒரு வாதத்திற்காக அப்படியே இறந்தாக வைத்துக்கொள்வோம். அப்படி யாராவது இறந்தால் அவர்களுக்கு இரத்தம் வருமா? இறந்த உடனேயே இரத்தம் உறைந்துவிடும். ஆனால் இயேசுவுக்கு, இறந்தப் பிறகும் இரத்தம் வந்ததாம். இறந்த ஒருவனுக்கு இரத்தம் எப்படி வெளியே வரும்? ஆனால் இயேசுவுக்கு வந்தது என்று பைபிளே சொல்கின்றது :

அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான். உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. (யோவான் 19:31-34)

அதாவது இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட மற்ற இருவரும் இறக்கவில்லையாம். அதனால் அவர்களின் கால் எலும்புகளை முறித்தார்களாம். ஆனால் இயேசு மட்டும் இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு அவரது கால் எலும்புகளை முறிக்கவில்லையாம். அப்பொழுது ஒருவன் இயேசுவை ஈட்டியால் விலாவிலே குத்தினானாம். உடனே இரத்தமும் தண்ணீரும் வந்ததாம். இறந்தவருக்கு எப்படி இரத்தம் வெளியே வரும்? உறைந்தல்லவா போய்விடும். சற்று சிந்திக்க வேண்டாமா? இயேசு இறந்தார் என்று நம்பினால் இந்த வசனங்களும், யோனாவின் அடையாளம் பற்றிய வசனமும் இன்னபிற வசனங்களும் முரண்படும். இயேசு இறக்கவில்லை என்று நம்பினால் உங்கள் குருட்டு நம்பிக்கை அடிபடும். எது சரி?

இன்னும் சொல்லப்பபோனால் இவர் எடுத்துக்காட்டும் யோவான் 3:14ம் வசனத்தையும் யோனாவின் அடையாளம் பற்றிய வசனத்தையும் ஒத்துப் பார்ப்போமேயானால், இயேசு பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்று சொன்னது இவர் எடுத்துக்காட்டும் வசனத்திற்கு அடுத்து நடக்க இருக்கும் சம்பவம். இவர் எடுத்துக்காட்டும் வசனத்தின் படி முதலில் சிலுவையில் அறையப்படுவார். யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தோடு ஒப்பிடும் போது அவர் உயிருடனேயே சவக்கிடங்கில் (பூமியின் இருதயத்தில்) இருப்பார். 3 இரவு 3 பகல் கழித்து பின்னர் உயிருடன் திரும்ப எழும்புவார். இதில் இவர்களது நம்பிக்கைக்கு எங்கே ஆதாரம் இருக்கின்றது? இவர்கள் நம்பிக்கைப் படித்தான் இயேசு இறந்து போக வேண்டுமே. ஆனால் இதில் எந்த வசனத்திலும் இயேசு இறப்பார் என்பதற்கு சான்றே இல்லையே!

இவர் எந்த வசனத்தை தனக்கு சாதகமான வாசனமாக எடுத்து வைக்கின்றாரோ அதுவும் அவருக்கு எதிராகவே அமைந்துவிட்டது என்பது தான் உன்மை.

Quote:

//மேலேயுள்ள வசனத்தில் குறிப்பிட்ட ஒற்றுமையானது 'உயர்த்தப்பட்டது -LIFTED UP' என்பதை பற்றி என்பது தெளிவாக விளங்கும். மோசே எப்படி சர்ப்பத்தை உயர்த்தினாரோ அதுபோல, இயேசுவும் உயர்த்தப்படவேண்டும். //

உங்கள் வாதப்படியே உயர்த்தப்படட்டும். அதன் பிறகு உயிரோடு இருந்தாரா இல்லையா?

Quote:

//தீதத் அவர்களின் லாஜிக்கை (Logic - வாதத்தை) இயேசு சொன்ன எடுத்துகாட்டோடு சம்மந்தப்படுத்தினால், அந்த வெண்கல சர்ப்பம் போல, இயேசு உயர்த்தப்படுவதற்கு முன்பு மரித்து இருக்கவேண்டும், சிலுவையிலும் அவரது மரித்த உடல் மட்டுமே இருந்திருக்க வேண்டும், மற்றும் சிலுவையிலிருந்து இறக்கும் போதும் அவர் மரித்தவராகவே இருந்திருக்க வேண்டும். அஹமத் தீதத் அவர்களின் இந்த வாதம் வாதத்திற்கு பொருத்தமானது அல்ல.//
சம்பந்தமே இல்லாமல் ஏன் உளறுகின்றீர்கள்? தீதாத் எப்பொழுது இப்படி சொன்னார்? எங்கே சொன்னார்? நீங்களாக கற்பனை செய்துக்கொண்டு ஏன் தீதாத் அவர்களின் தலையில் கட்டுகின்றீர்கள்? ஒரு வேளை அவர் மரணமடைந்துவிட்டார் என்ற தைரியமோ?

அடுத்து இன்னொறையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். அதாவது 'உயர்த்தப்படுதல்' என்றால் என்ன என்பதில் கூட இவர் சரியான குழப்பத்தில் இருக்கின்றார் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது. அதாவது, இவர் எடுத்துக்காட்டிய யோவான் 3 : 14ம் வசனத்தில் இயேசு பின்வருமாறு கூறுகின்றார்:

சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:14

இந்த இடத்தில் உயர்த்தப்பட்டது என்றால் எப்படி உயர்த்தப்பட்டது? மோசே எப்படி உயர்த்தினார்? வானத்திற்கு உயர்த்தினாரா அல்லது ஒரு கம்பத்தின் மேல் உயர்த்தினாரா? அதை எண்ணாகமம் 21:9ல் பின்வருமாறு சொல்லப்படுகின்றது.

அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான், சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான்.

அதாவது ஒரு உயிரே கொடுக்கப்படாத வெண்கலத்தால் செய்யப்பட்ட பாம்பை மோசே செய்து ஒரு கம்பத்தின் மேல் தூக்கி வைப்பதைத்தான் இயேசு 'மேலே உயர்த்தியது போல' என்று சொல்கின்றார். அதே போல் நானும் சிலுவையில் அறையப்படுவேன் என்று சொல்லுகின்றார். இப்படித்தான் இதற்கு பொருள் கொள்ள வேண்டும் என்று இந்த கிறிஸ்தவரே ஒரு இடத்திலும் சொல்கின்றார்: //அதாவது, தன்னை சிலுவையில் அறைவார்கள் என்பதை விளக்க ஒரு முறை இயேசு கீழ் கண்டவாறு சொல்லியுள்ளார்// என்கிறார். அதாவது 'உயர்த்தப்படுவேன்' என்பதற்கு 'சிலுவையில் அறையப்படுதல்' என்பது தான் பொருள் என்று இவரே சொல்கின்றார்.

அப்படி சிலுவையில் அறயப்பட்டதன் பிறகு உயிராக இருப்பாரா அல்லது இறந்துவிடுவாரா என்பதற்கு இந்த யோவான் 3:14 வசனத்தில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. ஆனால் மத்தேயு 12:39 ன் 'யோனாவின் அடையாளம்' பற்றிய வசனத்தோடு இந்த வசனத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் சிலுவையில் அறைந்ததன் பிறகு மரணமடையாமல் உயிருடன் தான் இருப்பார் - இருக்கவேண்டும் என்பது புலனாகிறது.

ஆனால் 'உயர்த்தப்படுதல்' என்ற வார்த்தையை இவர் முன்னுக்குப் பின் முரணாக புரட்டுகின்றார் :

அதாவது ஒரு இடத்தில் 'உயர்த்தப்படுதல்' என்பதற்கு சிலுவையில் அறையப்படுதல் என்கிறார்:

//தன்னை சிலுவையில் அறைவார்கள் என்பதை விளக்க ஒரு முறை இயேசு கீழ் கண்டவாறு சொல்லியுள்ளார்// என்கிறார். அதே கருத்தை மற்றோரு இடத்தில் //'தூணில் உயர்த்தப்படுதல்' என்பதை அந்த வெண்கல சர்ப்பத்தோடும் ஒப்பிட்டார்' // என்கிறார்

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக, 'உயர்த்தப்படுதல்' என்பது இறந்த பிறகு 'உயர்த்தப்படுதல்' என்று குழப்புகின்றார்:

//அந்த வெண்கல சர்ப்பம் போல, இயேசு உயர்த்தப்படுவதற்கு முன்பு மரித்து இருக்கவேண்டும், சிலுவையிலும் அவரது மரித்த உடல் மட்டுமே இருந்திருக்க வேண்டும், மற்றும் சிலுவையிலிருந்து இறக்கும் போதும் அவர் மரித்தவராகவே இருந்திருக்க வேண்டும்// என்கிறார்.

அதாவது இந்த இடத்தில் 'இயேசு உயர்த்தப்படுவதற்கு முன்பு மரித்திருக்க வேண்டும்' என்று சொல்வதன் மூலம், உயர்த்தப்படுதல் என்பது இறந்தப் பிறகு உயர்த்தப்படுதல் என்பதைத்தான் குறிக்கும், சிலுவையில் அறையப்படுதலைக் குறிக்காது என்கிறார். இவரது வாதத்தின் படி பார்த்தால் இயேசு இறந்த பிறகுதான் சிலுவையிலேயே ஏற்றி இருக்க வேண்டும். அப்படியா நடந்தது? இல்லை இல்லை இவரது வாதப்படி இந்த உயர்த்தப்படுதல் என்றால் இறந்த பிறகு உயர்த்தப்படுதல் என்றுதான் அர்த்தம் வரும் என்றால் மோசேயினுடைய இந்த கம்பத்தில் ஏற்றப்பட்ட சம்பவத்திற்கும் வானத்திற்கு உயர்த்தப்படுவதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா? ஏன் இந்த முரண்பாடு? காரணம் எப்படியாவது தங்கள் நம்பிக்கைக்கு ஏற்றவாறு பைபிள் வசனத்தை வளைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம். இது தேவையா? மோசேயின் அந்த சிறு சம்பவத்தைப் பற்றியே சரியான அறிவில்லாமல் அஹமத் தீதாத்திற்கு பதில் என்று எழுத வந்துவிட்டனர் இந்த மடையர்கள்.

இங்கே அஹமத் தீதாத்துடைய வாதம் பொருத்தமற்றதா அல்லது இவரது வாதம் பொருத்தமற்றதா? யார் குழப்புகின்றார்கள், யார் குழப்ப நிலையில் இருக்கின்றார்கள் என்று புரிகின்றதல்லவா?

Quote :

//அதோடு மட்டுமல்லாமல், யோனா உயிரோடு இருந்த நிலையும், இந்த சர்ப்பத்தின் உயிரில்லாத நிலையும் முரண்பட்டதாக உள்ளது (அதாவது, யோனா மீனின் வயிற்றில் இருந்த காலகட்டத்தில் முழுவதும் உயிரோடு இருந்தார், அந்த சர்ப்பம் ஆரம்பத்திலிருந்தே உயிரில்லாத பொருளாக இருந்து உயர்த்தப்பட்ட கால கட்டத்திலும் உயிரில்லாமல் இருந்தது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் இருக்கின்றன)//

உங்கள் குருட்டு நம்பிக்கை இப்படிப்பட்ட முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது. எந்த வசனத்தில் எதை எடுக்க வேண்டுமோ அதை எடுக்காமல் எதை எடுக்கக்கூடாதோ அதை எடுக்கின்றீர்கள். இயேசு 'யோனாவின் அதிசயத்தைப்போல' என்று சொன்ன இடத்தில் அதை எடுக்காமல் காலக்கணக்கை மட்டும் தான் எடுப்பேன் என்று முரண்டு பிடித்தீர்கள். யோவான் 3:14ம் வசனத்தில் 'சர்ப்பத்தை உயர்த்தியது போல்' என்று இயேசு கூறியதை சிலுவையில் அறையப்படுதல் என்று ஒரு இடத்தில் சொல்லிவிட்ட மற்றொரு இடத்தில் சம்பந்தமில்லாமல் 'இறந்த சர்ப்பத்தைப் போல' என்கிறீர்கள்? ஏன் இந்த குழப்பம் உங்களுக்கு? இறந்த சர்ப்பத்திற்கும் இயேசுவிற்கும் என்ன சம்பந்தம்? மோசேயால் கம்பத்தில் ஏற்றப்பட்ட சர்ப்பம் எப்போதாவது உயிருடன் இருந்ததா? இல்லையே. பிறகு எப்படி அது இறந்த சர்ப்பமாகும்? அது எப்பொழுது உயிருடன் இருந்தது இறப்பதற்கு? இரண்டையும் போட்டு ஏன் குழப்புகின்றீர்கள்?

Quote :

//இவைகள் நமக்கு எதை காட்டுகின்றன? இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் மோசே உருவாக்கிய சர்ப்பத்திற்கும் உள்ள ஒப்பிடுதலில், 'மூன்று நாட்கள் இரவும் பகலும்' என்ற விவரம் யோனாவோடும், 'தூணில் உயர்த்தப்படுதல்' என்பதை அந்த வெண்கல சர்ப்பத்தோடும் ஒப்பிட்டார் என்பதை நாம் அறியலாம். இயேசுவின் ஒப்பிடுதலில் யோனா உயிரோடு இருந்தாரா இல்லையா என்பது முக்கியமில்லை. இயேசுவின் ஒப்பிடுதலுக்கும் யோனா உயிரோடு இருந்தார் என்பதற்கும் சம்மந்தமே இல்லை//

எந்த வசனத்திற்கு எதை எடுக்கவேண்டும் என்பதையே புரியாமல் இருக்கின்றார் இந்த அறிவு ஜீவி. இது தான் இவர் பைபிளைப் புரிந்து வைத்துள்ள லட்சணம். இப்படி எல்லாம் இவர்கள் முரண்படுவதற்கு காரணம் இவர்களது குருட்டு நம்பிக்கையே!

Quote:

//யோனாவைக் குறித்து சொல்லப்பட்ட இடத்தில் மிகவும் முக்கியமாக உள்ள நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தை நீக்கிவிட்டு, தீதத் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைப் பற்றி 'யோனா எப்படியோ... அது போல மனுஷ குமாரனும்' என்று கூறுகிறார். //

தீதாத் சொல்லவருவதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் அவர் மீது பச்சைப் பொய்யை சுமத்துகின்றார் இந்த கிறிஸ்தவர். தீதாத் அவர்கள் மத்தேயு 12:39 வசனத்தின் மூலம் இரண்டு விஷயங்களை விளக்குகின்றார்கள். ஒன்று இயேசு யோனாவைப் போல உயிருடன் இருப்பார் என்றும் மற்றொன்று 3 இரவு 3 பகல் என்ற (Time Factor) கால அளவை பற்றியது. இவர் சொல்வது போன்று நேரம் சம்பந்தப்பட்ட விவரத்தை நீக்கிவிட்டு என்பது இவர் சொல்லும் பச்சைப் பொய்தானே? கர்த்தருக்காக பொய்சொல்லலாம் என்பது இது தானோ?

Quote :

//மீனின் வயிற்றில் எந்த நிலையில் (உயிரோடு) இருந்தார் என்பதை இயேசுவோடு ஒப்பிட்டது, தீதத் அவர்களின் சொந்தமான ஒப்பிடுதல் ஆகும் //

இது தவறு. பைபிளை வைத்து தான் பைபிளின் வசனத்தை வைத்துத்தான் ஒப்பிடப்படுகின்றது. அதற்கு மாற்றமாக தெளிவான ஆதாரத்தை காட்டவேண்டுமேயொழிய உங்கள் குருட்டு நம்பிக்கையை மையமாக வைத்து பைபிளில் ஆதாரம் தேடாதீர்கள். அப்படித் தேடினால் மேலே நீங்கள் குழப்பியதைப் போன்று குழப்பத்தில்தான் முடியும்.


Quote :

//சர்ப்பம் பற்றிய வசனத்தை கவனித்தால், நாம் இவ்விதமாக சொல்லவேண்டி வரும் 'சர்ப்பம் எப்படியோ ... அதே போல மனுஷகுமாரனும் (As the serpent ... so shall the Son of man be)'. இந்த விவரங்களில் சர்ப்பமானது மரித்த ஒன்றாக அல்லது உயிரில்லாத ஒன்றாக உயர்த்தப்பட்ட காலகட்டம் அனைத்திலும் இருந்தது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் சர்ப்பத்திற்கும் ஒப்பிட்டது, யோனாவோ, சர்ப்பமோ உயிரோடு இருந்ததா மரித்து இருந்ததா என்பதை ஒப்பிட்டு கூறவில்லை.

தங்களது குருட்டு நம்பிக்கைக்காக பைபிள் வசனத்தையே எப்படி எல்லாம் திரிக்கின்றார் என்று பார்த்தீர்களா? யோவான் 3:14 வசனத்தின் படி இயேசு சொல்ல வருவது 'சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது போல..' என்றால், என்னையும் 'கம்பத்தில் உயர்த்துவர்கள்' அதாவது 'சிலுவையில் அறைவார்கள்' என்கிறார். அதைதான் குறிக்கும் என்று இந்த கிறிஸ்தவரும் மேலே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இங்கே 'சர்ப்பம் எப்படியோ.. அதே போல மனுஷகுமாரனும்' என்று புது விளக்கம் தருகின்றார்;. இவர் சொல்லவரும் பொருள் என்ன? அதையும் அவரே சொல்கின்றார் அதாவது, சர்ப்பமானது மரித்த ஒன்றாக அல்லது உயிரில்லாத ஒன்றாக உயர்த்தப்பட்ட காலகட்டம் அனைத்திலும் இருந்தது என்கிறார். அதாவது சர்ப்பம் இறந்தநிலையில் உயர்த்தப்ட்டது அது போல் இயேசுவும் இறந்தநிலையில் உயர்த்தப்படுவார் என்கிறார். அது தான் 'சர்ப்பம் எப்படியோ ... அதே போல மனுஷகுமாரனும்' என்கிறார். ஆனால் இந்த யோவான் வசனத்தின் மூலம் இயேசு சொல்லவருவது 'இறந்த சர்ப்பம்' பற்றியா அல்லது 'கம்பத்தில் உயர்த்தப்படுதல்' பற்றியா? இந்த யோவான் வசனத்தின் நோக்கம் என்ன? இறந்த சர்ப்பம் பற்றி என்றால், சர்ப்பம் எப்போது உயிராக இருந்தது அது இறப்பதற்கு? இல்லை இல்லை கம்பத்தைப் பற்றித்தான் அந்த வசனம் சொல்கின்றது என்றால் ஏன் சர்ப்பத்தோடு இயேசுவை ஒப்பிட வேண்டும்? சற்று சிந்தித்து மொழி பெயர்க்க வேண்டாமா?

Quote :

//ஆக, தீதத் அவர்களின் முதலாவது மறுப்பு தோல்வி அடைந்து மண்ணை கவ்வியது என்பதை நாம் காணலாம். தீதத் அவர்கள் செய்யும் வாதங்களின் தன்மையில் எப்போதும் முரண்பட்ட விவரங்களே கிடைக்கும். ஒரு மறுப்பு அல்லது வாதம் தன்னைத் தானே முரண்பட்டால், அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது //

இது யாருக்கு பொருந்தும், யாருடைய வாதம் மண்னைக் கவ்வியது என்பதை மேலே விளக்கியுள்ளோம். போதைத் தெளிந்தவுடன் மீண்டும் இவர் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கட்டும். கர்த்தருக்கு சித்தமானால் அடுத்தப்பகுதியில் 3 இரவு 3 பகல் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.

தொடரும்...
குறிப்பு: இந்த ஆக்கம் அஹமத் தீதாத்திற்கு பதில் என்ற பெயரில் உமர் என்ற கிறிஸ்தவரால் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு பதில் அளிக்கும் வகையிலேயே வெளியிடப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆதிபாவம் உன்மையா? இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா? கிறிஸ்தவர்களின் இன்று நம்பிக்கொண்டிருப்பது போன்று இயேசு உயிர்த்தெழுந்தாரா? என்பது பற்றி விரிவான ஆய்வுத் தொடர் விரைவில் எமது ஏகத்துவம் தளத்தில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்...
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.