பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 2)
.
இவரும் இவரது தந்தையும் பரிசேயரை சார்ந்தவர்கள் என்று இவரே கூறியதாக அப்போஸ்தலர் நடபடிகள் கூறுகின்றது. (அபபோஸ்தலர் 23:6, 26:5) இந்த பரிசேயர் என்பவர்கள் யார்? அவர்கள் இயேசுவின் காலத்திலும் அவருக்குப் பின்னும் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்? என்பதை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் பின்வருமாறு கூறுகின்றது:
'பரிசேயர் எனப்படுபவர்கள் யூதமத ஒருசிறு குழுவை குறிக்கும். இது சமய மற்றும் அரசியல் நோக்கந்களை கொண்டிருந்தது. திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள். யூதரான யாரும் பரிசேயராக மாரலாம். இவர்கள் யூதமத கலாச்சாரங்களை காப்பதில் முன்னின்று செயற்பட்டு வந்தனர். ஆனாலும் இயேசு வாழ்ந்த சமூகத்தில் பரிசேயரில் பெரும்பாலானோர் நீதிமான்கள் போல வேடமிட்டு திரிந்தனர். தங்களை உத்தமரென்று பரைசாற்றுவதில் முன்னின்று செயற்பட்டனர்.' பார்க்க : விக்கிபிடியா
இந்த பரிசேயர்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று இயேசு தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் உபதேசித்தார். குறிப்பாக அவர்கள் எந்த செய்தியைக் கொண்டுவந்தாலும் அதிலிருந்து மிக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். பார்க்க : (மத்தேயு 16:5-12, மாற்கு 8:14-21)
எந்த பரிசேயரைக் குறித்தும் அவர்கள் சொல்லும் செய்திகள் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு எச்சரித்தாரே, அதே பரிசேயரைச் சேர்ந்த பவுல் எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் கேட்டோமேயானால் நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையுமே ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படும் செய்தியில் பொய் மலிந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், அவர் இயேசு கொண்டுவந்த மார்க்கத்தையும், அவரின் கொள்கைகளையும் இயேசுவின் பெயராலேயே எப்படியெல்லாம் சீரழித்தார் என்பதற்கு இன்றைய பைபிளே சரியான சான்று.
பவுலின் ஆரம்பக் காலம் :
யூத மதத்தவரான பவுல் இயேசுவிற்கு பிறகு அவர் போதித்த இறைக்கோட்பாட்டிற்கும் அதை பின்பற்றியவர்களுக்கும் எதிரானவராக இருந்தார் என்று அப்போஸ்தல நடபடிகள் குறிப்பிடுகின்றது.
சவுல் வீடுகள் தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்தீரிகளையும் இழுத்துக் கொண்டு போய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக் கொண்டிருந்தான். (அப்போஸ்தலர் 8:3)
இந்தச் சவுல் என்னும் பவுல் இயேசுவைப் பின்பற்றியவர்களை துன்புறுத்தி வந்தான். அவர்கள் தமஸ்குவிற்கு தப்பிச் சென்ற பிறகும் அவர்களைப் பிடித்துக் கொண்டு வருவதற்காக தலைமை குருவிடம் அதிகார கடிதம் வாங்கிக் கொண்டு சென்றதாக அப்போஸ்தலரின் நடபடிகள் கூறுகின்றது.
சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியாரிடத்திற்குப் போய் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்தீரிகளையாகிலும் தான் கண்டு பிடித்தால், அவர்களை கட்டி எருசலேமுக்கும் கொண்டு வரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிரூபங்களைக் கேட்டு வாங்கினான். (அப்போஸ்தலர் 9:1-2)
இப்படி உன்மையான இயேசுவின் சீடர்களையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பல துன்பங்களைக் கொடுத்து பலரை கொலை செய்யவும் துடித்த யூதரான பவுல், திடீரென ஒரு அதிசயமான (?) சம்பவத்தின் மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டாராம். சூழ்சிகளுக்குப் பெயர் பெற்ற யூதர்களும் - இயேசுவால் மக்களுக்கு எச்சரிக்கப்பட்ட யூதர்களைச் சேர்ந்த பரிசேயர்களும் எப்படி எல்லாம் சத்தியத்தை சீரழிப்பதற்காக பொய் சொல்லத் துணிவார்கள் என்பதற்கு பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்ட கதையே சரியான சான்று.
இயேசுவை பவுல் ஏற்றுக்கொண்டது எப்படி?
இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களை கொலைசெய்துக்கொண்டிருந்த பவுல் தீடீரென இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு காரணம் என்ன? அவர் எப்படி ஏற்றுக்கொண்டார்? என்பதை பவுலின் நன்பரான லூக்கா அப்போஸ்தலரின் நடபடிகள் என்றப் புத்தகத்தில் ஒரு பொய்யானக் கதையை சொல்லி மக்களை ஏமாற்ற முற்படுகின்றார் :
அவன் பிரயாணமாய் போய், தமஸ்குவுக்குச் சமீபித்த போது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன் : ஆண்டவரே, நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே : முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்த போது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய் புசியாமலும் குடியாமலும் இருந்தான். (அப்போஸ்தலர் 9:3-9)
அதாவது இயேசுவின் உன்மையான சீடர்களை துன்புருத்துவதற்காக தேடியவனாக தமஸ்காவுக்கு பயனம் செய்துக்கொண்டிருக்கும் வழியில் இந்த சம்பவம் (?) நடந்ததாக இந்த வசனங்களின் மூலம் தெரியப்படுத்தப் படுகின்றது.
இன்றைய கிறிஸ்தவ மதத்தின் தலையாய கோட்பாடுகளுக்கு சொந்தக்காரரான பவுல், இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி என்பது பற்றி சொல்லப்படும் இந்த சம்பவம் அவரும் அவரைச் சார்ந்தவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொய் என்பதற்கு அவர்களாளேயே எழுதப்பட்ட மற்ற மற்ற வசனங்களில் வரும் முரண்பாடுகளே சரியான சான்று.
இந்த அப்போஸ்தலர் 9:3-9 வசனங்களின் இடையே சில விஷயங்களை நன்றாக கவனிக்க வேண்டும்:
ஒன்று, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். என்பதன் மூலம் திடீரென வந்த ஒளி பவுலை மட்டும் சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் தரையிலே விழுந்தானாம்.
இரண்டு, நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். என்பதன் மூலம் பவுல் என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டனத்துக்குச் சென்றதும் சொல்லப்படும் என்று இயேசு கூறினாராம்.
மூன்று, அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். என்பதன் மூலம் பவுலுடன் கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம் ஆனால் ஒருவரையும் காணவில்லையாம்.
நான்காவது, அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள் என்பதன் மூலம் பவுல் மட்டும் கீழே விழுந்ததால் மற்றவர்கள் அவரை கைலாகு கொடுத்து கூட்டிக்கொண்டு போனார்கள் என்கிறார்.
இவற்றுக்கெள்ளலாம் நேர் முரணாக அதே அப்போஸ்தலருடைய நடபடிகளின் மற்ற மற்ற இடங்களில் இதே சம்பவத்தை பற்றி எழுதிவைத்துள்ளதைப் பாருங்கள்:
அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமான போது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது : சவுலே. நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் : ஆண்டவரே நீர் யார் என்றேன். அவர் : நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான் ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர் நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ. நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். (அப்போஸ்தலர் 22:6-10)
இந்த வசனத்தில் அதே சம்பவத்தை சொல்லிவிட்டு என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. (அப்போஸ்தலர் 22:9) என்று சொல்லப்படுகின்றது. ஆனால் முன்பு நாம் எடுத்துக்காட்டிய வசனத்தில் அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? அவனோடு கூட பயனம் செய்தவர்கள் சத்தத்தைக் கேட்டார்களா? அல்லது கேட்கவில்லையா? வெளிச்சத்தைக் கண்டார்களா? அல்லது காணவில்லையா? இந்த ஒரே சம்பவத்தை ஒரே புத்தகத்தில் ஒரே ஆசிரியரால் (?) எழுதப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக 'பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதியுள்ளார் என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இவை எல்லாம் உன்மையாக இருந்தால் எப்படி இப்படிப்பட்ட முரண் வரும்?
அடுத்து, இந்த இரண்டு வசனங்களில் வரும் சம்பவங்களும் ஒன்றுக்கொண்று நேர் முரணாக இருக்க, அதே பவுல் இயேசுவை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது பற்றி அதே அப்போஸ்தலர் என்ற புத்தகத்தில் மூன்றாவதாக மற்றோர் இடத்திலும் பவுல் சொல்வது போல் சொல்லப்படுகின்றது. அந்த இடத்தில் இந்த இரண்டு வசனங்களுக்கும் நேர் முரனாக சொல்லப்பட்டுள்ள செய்தியைப் பாருங்கள்.
'இப்படிச் செய்து வருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும் போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனே கூடப் பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன். நாங்களெல்லோரும் தரையிலே விழுந்த போது : சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்ப்பபடுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்' (அப்போஸ்தலர் 26:12-14)
முதல் அறிவிப்பில் பவுலை மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்பொழுது அவனோட கூட பிரயானம் பன்னியவர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம். ஆனால் ஒளியையோ அல்லது வேறு யாரையுமோ பார்க்கவில்லையாம்.
இரண்டாவது அறிவிப்பிலும் பவுலை மட்டுமே அந்த ஒளி சுற்றி பிரகாசித்தாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்போது அவனோட கூட பிரயானம் பன்னினவர்கள் வெளிச்சத்தைக் கண்டு பயம் அடைந்தார்களாம். ஆனால் சத்தத்தையோ கேட்கவில்லையாம்.
மூன்றாவது அறிவிப்பில் பவுலையும் பவுலோடு கூட பிரயானம் பண்ணினவர்களையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அவர்கள் எல்லோருமே அதிர்ச்சியில் கீழே விழுந்துவிட்டார்களாம். இவற்றில் எது சரி? முதல் இரண்டு அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா? அல்லது மூன்றாவது அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் எல்லோரையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா? முதல் அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் கீழே விழுந்தாரா? அல்லது அவனோடு கூட பிரயானம் பண்ணிவர்கள் அனைவரும் சேர்ந்து கீழே விழுந்தார்களா?
இது மட்டுமல்ல முதல் அறிவிப்பில் பவுல் மட்டுமே கீழே விழுந்ததால், அவனை மற்றவர்கள் கைலாகு கொடுத்து தூக்கி விட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு மாறாக மூன்றாவது அறிவிப்பில் எல்லோருமே கீழே விழுந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. அப்படி என்றால் முதல் அறிவிப்பின் படி கைலாகு கொடுத்து தூக்கிவிட்டார்கள் என்பது எப்படி சரியாகும்?
முதல் இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொண்று முரணாயிருக்க அந்த இரண்டிற்கும் நேர்முரணாக இந்த மூன்றாவது அறிவிப்பு எந்த அளவுக்கு முரணாக இருக்கின்றது என்று கவனித்தீர்களா சகோதரர்களே?
இது மட்டுமல்லாமல் இதே கதையில் வேறு சில முரண்பாடுகளையும் பாருங்கள். அப்போஸ்தலர் 9: 5-10 மற்றும் 22:10-15ம் வசனத்தின் படி பவுல் என்ன செய்யவேண்டும் என்பதை தமஸ்காவுக்கு போனதும் சொல்லப்படும் என்று இயேசு சொன்னதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அப்போஸ்தலர் 26:16-18 ம் வசனங்களில் அதே இடத்திலேயே அவரை புறஜாதியருக்கு பிரச்சாரம் செய்ய நியமித்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதில் எது சரி? பவுல் செய்யவேண்டியதை சம்பவ இடத்திலேயே சொல்லப்பட்டதா? அல்லது பட்டனத்திற்கு சென்றதும் சொல்லப்படும் என்று சொல்லப்பட்டதா?
இப்படி ஒரே சம்பவம் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட சம்பவம் கூடுதலாக கர்த்தரின் பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதப்பட்ட சம்பவம் உன்மையிலேயே நடந்ததாக இருந்தால் இப்படி முன்னுக்குப் பின் முரணாக வருமா? அதுவும் இந்த பவுல் ஒரு சாதாரண ஆளாக இருந்தால் விட்டுவிடாலம். மாறாக, புதிய ஏற்பாட்டின் அதிக புத்தகங்களுக்கு ஆசிரியர். இன்றைய நவீன கிறிஸ்துவத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர். இவர் போதிக்கும் கொள்கையை மறுப்பவன் இரட்சிப்பை பெறமுடியாது, அவன் பரலோகத்தை அடைய மாட்டான் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. இயேசுவின் போதனைகளுக்கும் எதிரான பல புதிய கருத்துக்களைப் புகுத்தும் அதிகாரம் உடையவராக தன்னைக் காட்டிக்கொள்கின்றார். அதை இயேசுவே தனக்கு போதித்ததாகவும் சொல்கின்றார். ஆரம்பக்காலத்தில் உன்மையான இயேசுவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்யத் துடித்தவர் இந்த பவுல். அப்படிப்பட்டவர் திடீரென இயேசுவை ஏற்றுக்கொண்ட சம்பவத்தில் எப்படி இந்த அளவுக்கு முரண் வரலாம்? இந்த சம்பவம் உன்மையானதாக இருந்தால் எப்படி இந்த அளவுக்கு முரண்வரும்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டுமா?
உன்மையில் சொல்லவேண்டும் என்றால் பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் பொய் மலிந்துக் கிடப்பதால் தான் இதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துக்கொண்டிருக்கின்றது. இந்த பவுலும் இவரைச் சார்ந்தவர்களும் தங்கள் மனம்போன போக்கில் எழுதிய புத்தகங்களை தான் இன்றைய கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதிக்கொண்டிருக்கின்றனர்.
.
.கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.